தெரிந்து வினையாடல் திருக்குறள்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்

குறள் எண்: 511 அதிகாரம்: தெரிந்து வினையாடல்
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை

குறள் எண்: 512 அதிகாரம்: தெரிந்து வினையாடல்
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

குறள் எண்: 514 அதிகாரம்: தெரிந்து வினையாடல்
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்

குறள் எண்: 516 அதிகாரம்: தெரிந்து வினையாடல்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

குறள் எண்: 517 அதிகாரம்: தெரிந்து வினையாடல்
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்

குறள் எண்: 518 அதிகாரம்: தெரிந்து வினையாடல்
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு

குறள் எண்: 519 அதிகாரம்: தெரிந்து வினையாடல்
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு

குறள் எண்: 520 அதிகாரம்: தெரிந்து வினையாடல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...