பகைத்திறம் தெரிதல் திருக்குறள்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று

குறள் எண்: 871 அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை

குறள் எண்: 872 அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்

குறள் எண்: 873 அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்

குறள் எண்: 876 அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து

குறள் எண்: 877 அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு

குறள் எண்: 878 அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து

குறள் எண்: 879 அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்

குறள் எண்: 880 அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...