பருகி முடித்தபின்னும் தித்திக்கும் தேனீரின் சுவையாய் நீ தந்ந முத்தங்களும் சுவைக்கிறது எச்சில் உலர்ந்த பின்னும்
இரவுக்கும் இரக்கமில்லை உறக்கத்தை கொள்ளையடித்து உன் நினைவிலேயே தவிக்க விடுகிறது
உனக்காக நான் என்ற உன் வார்த்தையில் இந்த உலகமே என் கைக்குள் அடங்கியது போல் உணர்ந்தேன் அன்பே
சுட்டெறிக்கும் வெயிலும் அழகுதான் ஒரு குடைக்குள் உன்னோடு இளைப்பாறுகயில் காதலில்
உனக்காக காத்திருத்தலின் வலியை உன் நினைவுப் பீலி கொண்டே வருடிக்கொள்கிறது மனது
அதிசயம் என்று எதுவுமில்லை நொடிக்கொரு முறை எனை சூழ்ந்து கொள்ளும் உன் நினைவுகளை விட
உன் பாதையில் என் பாதங்களும் அலை அழித்தாலும் அகிலமே எதிர்த்தாலும்
என் திமிரு கோபம் இவற்றிக்கு மத்தியில் ஒரு அன்பும் காதலும் வெளிவருகிறது அவனிடம் மட்டுமே
ஆழுறக்கத்திலும் உன் அரவணைப்பு பனிக்கால போர்வையாய் கதகதக்கிறது அன்பே
கட்டுப்பாடான மனம்தான் இன்று கட்டுக்கடங்காத ஆசைகளோடு கடக்குது நீயெதிரே தோண்றும் போதெல்லாம்
நிலவில்லாத வானும் நீயில்லாத என் வாழ்வும் இருளடைந்தே இருக்கும் "(நிலவும் நானும்)"
என் தேவை அறிந்து சேவை செய்யும் சேவகன் இவன் வீட்டுக்கு அரசன் என்றாலும் காதலில்
பார்வையில் ஒரு கவிதை கேட்டால் பாதத்தில் கொட்டி தீர்கிறான் பல கவிதைகளை பாவையிவள் ரசிக்க மென்னிதழ் கொண்டு
இருளின் அடர்த்தியை வெளிச்சமே நிர்ணயிப்பது போல் தேடுதலின் வலியை நினைவுகளே நிர்ணயிக்கிறது