அடி வாங்கி கற்றுக் கொள்ளும் பாடங்கள் தான் அழகாய் பக்குவப்படுத்தும்.
அதிகம் பேசாதவனின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு எப்பொழுதும் அதிக மதிப்பு உண்டு.
நடக்கும் கால்களில் கூட எவ்வளவு வேறுபாடு.. ஒன்று முன்னால் மற்றொன்று பின்னால் ஆனால்.. முன்னால் இருக்கும் கால் கர்வப்படவும் இல்லை.. பின்னால் இருக்கும் கால் அவமானப்படவும் இல்லை.. அவைகளுக்கு தெரியும் நிமிடத்தில் நிலைமை மாறும் என்று.!
உன்னால் முடியும் என்று உன்னை ஊக்கப்படுத்தும் மனிதர்களுடன் பழகு அவர்கள் தான்.. நீ தவறி விழும்போதெல்லாம் உன்னை தாங்கி முன்னேற்றி செல்வார்கள்.
வெற்றி என்பது தொலைதூரமல்ல.. கனவுகளை காதலியுங்கள்.. எண்ணத்தை அதிகப்படுத்துங்கள்.. முயற்சியை அதிகப்படுத்துங்கள்.. தன்னம்பிக்கையை மனதில் வையுங்கள்.
வெற்றிக்கான வழியை சிந்தித்து அதற்கான முயற்சியினை செய்து சந்தர்ப்பங்களை உருவாக்குபரே சாதனையாளர்கள்.
முதல் நிலை வரவேண்டுமானால் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது முயற்சியை கைவிடக் கூடாது.
என்னால் முடியுமென்ற நம்பிக்கையோடு எதையும் முயற்சி செய்யுங்கள்.. எல்லாம் வெற்றிகரமாக முடியும்.!
தொடக்கமும் முடிவும் நம் கையில் தான் முயன்றால் வெற்றி.. இல்லாவிட்டால் பயிற்சி.
நாம் செய்யும் விடயங்கள் இலகுவில் நல்ல முடிவை தராது.. ஆனால் இடைவிடாத விடாமுயற்சி வெற்றி எனும் விடையை தேடி தரும்.
பல நேரங்களில் அவமானங்கள் கூட வெற்றிக்கு வழி வகுக்கும்.. நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால்.!
இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லாதே ஏனென்றால் நீ எல்லையற்ற வலிமை உடையவன்.
உங்களில் ஒருவன் தான் நான்.. உள்ளத்தாலும் உணர்வாலும் குறைந்தவன் அல்ல.. இப்படிக்கு முயற்சி.!
முயற்சி என்பது கானல் நீர் தான்.. ஆனால் அது நிச்சயம் ஆற்றங்கரைக்கு அழைத்தே செல்லும்.!
நம்மை நாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி இலக்கு.. தன்னம்பிக்கை.. விடா முயற்சி..!
இலட்சியம் இருந்தால் முயற்சி வரும்.. முயற்சி செய்தால் நேரம் வரும்.. நேரம் இருந்தால் வாய்ப்பு வரும்.. வாய்ப்பை பிடித்தால் வெற்றிகள் வரும்.!
உயர்வுக்காக ஆசைப்பட்டு.. ஆசைக்கான முயற்சி எடுத்து முயற்சிக்கான உழைப்பை கொடுத்தால் வெற்றி நம் கையில்.!
வென்று விட்டுப் பேசுங்கள் பொறுமையாய் கை தட்டி காதுகளை தீட்டி கேட்கும் இவ்வுலகம்.!
நீ தூக்கி எறியப்பட்ட இடத்திற்கே சிறப்பு விருந்தினராக செல்வது உனது திறமைக்கும் முயற்சிக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.!
தயங்கி கொண்டே நிற்காதே.. ஒரு முறை முயற்சி செய்து விடு.. வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்.. தோல்வியினால் இன்னும் நிறைய கற்றுக்கொள்.. முயன்றால் எதுவும் முடியும்.!
தன்னம்பிக்கை இருக்கும் இடங்களில் ஆறுதல்களுக்கு அதிக வேலை இருப்பதில்லை.
பிறர் புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை.. முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை.
கிடைக்குமா என்று கேட்காதே.. கிடைக்கும் என நம்பு.! நடக்குமா என கேட்காதே.. நடக்கும் என நம்பு.! முடியுமா என கேட்காதே.. முடியும் என நம்பு.!