Tamil Quotes For Life

அடுத்தவர் நம்மை எப்படி வேண்டுமானாலும் பார்க்கட்டும்.. நாம் நேர்வழியிலும் நடத்தையிலும் பேச்சிலும் நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்போம்.!

Category: Motivational Posted by: TamilPedia
உன் ஆடம்பரத்தை விட உன் அடக்கமே அனைவரிடத்திலும் பெரிதும் மதிக்கப்படும்.

Category: Motivational Posted by: TamilPedia
பணமும் பாசமும் அதன் மதிப்பு தெரியாதவர்களிடம் நீடிப்பதில்லை.

Category: Motivational Posted by: TamilPedia
பிறரை எதிர்ப்பதை விட.. பணியக் கற்றுக்கொண்டால் பதவி தானாக வரும்.. வார்த்தையை விடாதீர்கள்.. வாழ்ந்து காட்டுங்கள்.!

Category: Motivational Posted by: TamilPedia
நம்முடைய தகுதியை தீர்மானிப்பது நமக்கு நெருக்கமானவர்கள் அல்ல.. நமது செயலும் நல்லெண்ணங்களும் நடந்துகொள்ளும் விதமும்தான்.!

Category: Motivational Posted by: TamilPedia
திருந்துவதற்கு வாய்ப்பும் இடமும் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் வருந்துவதற்கு கடவுள் நேரத்தை வகுத்து விடுவான்.. செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்.!

Category: Motivational Posted by: TamilPedia
இருக்கும் இடங்களையும் சேர்க்கும் சேர்க்கைகளையும் மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.. நடப்பவை அனைத்தும் நன்றாகவே நடந்து விடும் வாழ்க்கையில்.

Category: Motivational Posted by: TamilPedia
படைப்பில் பிரமாண்டமான படைப்பு நம்முடைய மனதுதான்.. மனதை அழகுபடுத்துங்கள் வாழ்க்கை அழகாகும்.

Category: Motivational Posted by: TamilPedia
எந்த நிலை வந்தாலும் தன்னிலை மறக்காதே.. முடிந்ததை நினைக்காமல் வருவதை எதிர்த்து வாழ ஆரம்பியுங்கள்.

Category: Motivational Posted by: TamilPedia
உங்களுடைய தகுதியை நினைத்து வாழ்ந்தால் மிகச்சிறப்பாக எளிமையாக மனநிறைவோடு வாழலாம்.

Category: Motivational Posted by: TamilPedia
உண்மையான செல்வாக்கை நாம் தேடிக்கொள்ள கூடாது.. அது நம்மைத் தொடர்ந்து வர வேண்டும்.!

Category: Motivational Posted by: TamilPedia
நீ விரும்பும் மயிலை விட.. உன்னை விரும்பும் காக்கையே மேல்.

Category: Motivational Posted by: TamilPedia
வாழ்க்கை என்பது வளையம் போன்றது தொடக்கமும் முடிவும் தெரியாத ஒன்று.. இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டாலே மகிழ்ச்சிதான்.

Category: Motivational Posted by: TamilPedia
கவலைகளும் பிரச்சனைகளும் வந்து கொண்டே தான் இருக்கும் அதற்காக வருத்திக் கொண்டே இருக்காமல் மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்காவது கற்றுக்கொள் மகிழ்ச்சி தானாகவே உண்டாகும்.

Category: Motivational Posted by: TamilPedia
நாம் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் நல்லபடியாகவே முடியும்.. நல்ல முறையில் முடியவில்லை என்றால் தோற்றுவிட்டோம் என்று பொருள் அல்ல.. சவால்கள் இன்னும் முடியவில்லை என்றே பொருள்.

Category: Motivational Posted by: TamilPedia
எடுத்து சொல்வதை விட.. எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவதே சக்தி வாய்ந்தது.

Category: Motivational Posted by: TamilPedia
சிக்கல்களை சந்திக்கும் வரை வாழ்வில் மிகுந்த வெற்றி பெற முடியாது.. சிக்கனத்தை சிந்திக்கும் வரை வாழ்வில் மிகுந்த பொருள் சேர்க்க முடியாது.. சிரிப்பை உதடுகளில் சிந்தும் வரை வாழ்வில் மிகுந்த அன்பை அடைய முடியாது.

Category: Motivational Posted by: TamilPedia
கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்.. எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள் வெற்றி காணலாம்.

Category: Motivational Posted by: TamilPedia
நீ எதற்கு அதிகம் பயப்படுகிறாயோ அதையே எதிர்த்து நில்.

Category: Motivational Posted by: TamilPedia
இந்த உலகில் கடினமானவை நிறையவே உண்டு ஆனால்.. முடியாது என்று எதுவும் இல்லை.

Category: Motivational Posted by: TamilPedia
தனித்து நின்றாலும் சில எழுத்துக்களுக்குப் பொருள் உண்டு.. தனியாக நின்றாலும் மரங்கள் ஊருக்கே நிழல் கொடுப்பதுண்டு.. தனியாக நின்றாலும் கலங்காதே.. சமுதாயங்கள் படிப்பதெல்லாம் தனி மனித சரித்திரங்களைத் தான்.!

Category: Motivational Posted by: TamilPedia
எதற்காகவும் அவசரப்படாதீர்கள் நேரம் வரும் போது தானாகவே அது நடந்தேறும்.

Category: Motivational Posted by: TamilPedia
உனக்கான தேவையை நீயே தேடிக்கொள் உன் உழைப்பின் மூலம்.

Category: Motivational Posted by: TamilPedia
உனக்கான அடையாளத்தை உருவாக்கு உனக்கான அங்கீகாரம் உன்னை தேடி வரும்.

Category: Motivational Posted by: TamilPedia
தோல்வியை கண்டு அஞ்சுபவர்களிடம் இருந்து வெற்றி தானாகவே ஒதுங்கி கொள்ளும்.!

Category: Motivational Posted by: TamilPedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...