எதையும் அதிகம் விரும்பி விடாதீர்கள்... காரணம்.. எதுவும் நமக்கான நிரந்தரமானவைகள் அல்ல..
அழவைத்தவரே கண்ணீரை துடைக்கட்டும் என்று காத்திருக்கிறது எனது கண்கள்..
மற்றவர் நம்மை வெறுப்பது கூட தெரியாமல் ஏன் என் கூட பேசல என்னாச்சு என்று கேட்குற மனம் தான் அதிகம்...
தொலைந்து போன என் வார்த்தைகளை எல்லாம் கண்டுபிடித்து விட்டேன் உன் மௌனத்தில்..
நாம் அனைவரும் சரியாக செய்யும் ஒரே தவறு. சிலரை உண்மையாக நேசிப்பது....
வலியை விட கொடுமையானது நாம் பேச நினைக்கும் ஒருவரிடம் பேச முடியாமல் போவது தான்.!!
சிலருக்கு விளக்கம் கொடுப்பதை விட... அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே மேல்...
யாருக்கும் உன்னை பிடிக்கவில்லை என்றால் நீ இன்னும் நடிக்க கற்று கொள்ளவில்லை என்றே அர்த்தம்...
சில கண்ணீர்களுக்கு தான் விரல்கள் கிடைக்கின்றன... பெரும்பாலானவை தரைக்கும் தலையனைக்குமே சொந்தம்...
உன் நினைவுகள் என்னும் கானகத்தில் பிரிவு எனும் வலியை தந்து இடைவிடாமல் என்னை நனைய செய்து விட்டாயே...
என் நினைவு வந்தாலும் என்னைத் தேடாதே உன் இதயத்தைத் தொட்டுப்பார் நான் துடிப்பேன் உன்னை நினைத்துக் கொண்டு என்றென்றும்....
நீ என்னிடம் பேசி என்னை வருத்தமடைய வைக்க கூடாது என்று எண்ணி நீ வருந்துகிறாய்.. நானோ நீ அப்படி வருந்துவதை நினைத்து இனிமேல் பேச வேண்டாம் என்று விலகிவிட்டேன், நீ வருந்தக்கூடாது என்பதற்காக....
தயவு செய்து திரும்பி வந்து விடாதே.... இனியும் உனக்காய் என்னால் காத்திருக்க முடியாது. நாட்கள் கடந்ததால் நானும் ஒரு துணையை தேடி விட்டேன் - அவன் பெயர் தனிமை.
உன்னை மறந்த இதயத்தை நினைத்துக கொண்டு உன்னை உண்மையாக நேசிக்கும் இதயத்தை இழந்து விடாதே.
இன்று உண்மையான அன்பை அலட்சியம் செய்பவர்கள் நிச்சயம் ஓர் நாள் அதே அன்பு கிடைக்காதா என்று ஏங்குவார்கள்
எல்லா வலிகளையும் வார்த்தைகளால் வெளியே சொல்லி விட முடியாது, ஓசையின்றி மௌனமாகவே அழுகின்ற ஓராயிரம் வலிகள் காலம் இங்கே எல்லோரின் இதயத்திலும் உண்டு...
ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட ஏமாந்துவிட்டேன் என்ற கவலை என்னை தினம் தினம் கொல்கிறது. உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை, பொய்யாய் பழகிட எனக்கு தெரியவில்லை. அதனால் கூறுகிறேன் இனியாவது உண்மையாய் நடந்து கொள் என்னிடம் அல்ல உன்னுடன் இருப்பவர்களிடம்..
உரிமையோடு சிலரை உறவென்று நினைத்ததை தவறென்று புரிந்தேன். மீண்டும் தனிமையே போதும் என்று விலகி விட்டேன்..
தேடித்தேடிப் போய் காட்டுகிற அன்பு... குப்பையை விட கேவலமானதாகி விடுகிறது...!
அதிர்ச்சியை அலட்சியமாக கடக்க பேரதிர்ச்சியை அனுபவித்தவர்களால் தான் முடியும்.
குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் ஏனென்றால் உங்களை நீங்களே செதுக்கி கொள்வதற்கு அவர்கள் தான் உளி கொடுக்கின்றனர்.
ஒருபோதும் தவறு செய்யாத எவரும் புதியதை முயற்சித்ததில்லை...
முடிவுகள் எடுக்க கஷ்டப்படுகிறீர்களா? முடிவெடுக்கும் போது உங்கள் உள்ளுணர்வுகளை கவனியுங்கள்.
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
விதி ஆயிரம் கதவுகளை மூடினாலும், முயற்சி ஒரு ஐன்னலையாவது திறக்கும் முடங்கி விடாதே தொடர்ந்து முயற்சி செய்..