Tamil Proverbs (தமிழ் பழமொழிகள்)

தெண்டச் சோற்றுக்காரா, குண்டு போட்டு வா அடா!
விளக்கம்: வேலை ஒன்றும் செய்யாமல் தண்டச்சோறு தின்பவனே, எட்டு மணிக்கு குண்டு போட்டதும் வாடா!

Posted by: TamilPedia
ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.
விளக்கம்: ஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.

Posted by: TamilPedia
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம், எண்பதுகோடி நினைந்து எண்ணும் மனம்.
விளக்கம்: உண்பதற்கு ஒரு படி அரிசி இருந்தால் போதும். உடுப்பதற்கோ நான்கு முழம் துணி போதும். ஆனால் மனத்திலோ கோடிகோடி ஆசைகள்.

Posted by: TamilPedia
உன்னைப் பிடி என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி.
விளக்கம்: உன்னையும் என்னையும் பிடித்தபிறகு, உலகாளும் தேவியின் தலையிலேயே கையை வை.

Posted by: TamilPedia
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
விளக்கம்: இருப்பதே போதும் என்று திருப்தியுற்ற மனமே அது தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மருந்து ஆகும்.

Posted by: TamilPedia
அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ?
விளக்கம்: வெய்யிலில் சூடான அரிவாள் தண்ணீர் பட்டால் குளிரும். உடல் ஜுரம் அதுபோல ஆறுமா?

Posted by: TamilPedia
எட்டுவருஷம் எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுமாம்.
விளக்கம்: எத்தனை முறை வந்த வழியே போனாலும் அது எந்த வழி என்று தெரியாது இருப்பது.

Posted by: TamilPedia
நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி.
விளக்கம்: நடக்கவே கஷ்டப்படும் குதிரையைப் பலவிதமான சவாரிக்குப் பயன்படுத்தியது போல.

Posted by: TamilPedia
புட்டுக்கூடை முண்டத்தில் பொறுக்கியெடுத்த முண்டம்.
விளக்கம்: ஒரு கூடை நிறைய முட்டாள்கள் இருந்தால் அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டாள் அவன்.

Posted by: TamilPedia
இரிஷி பிண்டம் இராத் தாங்காது.
விளக்கம்: கருவாக நேற்று உருவான குழந்தை இன்று பிறந்ததுபோல.

Posted by: TamilPedia
எள்ளு என்கிறதுக்குமுன்னே, எண்ணெய் எங்கே என்கிறான்?
விளக்கம்: எள்ளைக் கொடுத்தால் உடனே அதில் எண்ணையை எதிர்பார்க்கிறான்.

Posted by: TamilPedia
குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?
விளக்கம்: குளமே உடைந்துவிட்டபோது அதனைச் சீர்திருத்துவது யார் முறை என்று கேட்டானாம்.

Posted by: TamilPedia
நாய்க்கு வேலையுமில்லை, நிற்க நேரமுமில்லை.
விளக்கம்: எந்த வேலயும் இல்லாமல் ஒரு நாய் அலைவதுபோல, கவைக்குதவாத பொழுதுபோக்கு வேலைகளை வைத்துக்கொண்டு அவன் தான் எப்போதும் ’பிஸி’ என்கிறான்.

Posted by: TamilPedia
ஆகட்டும் போகட்டும், அவரைக்காய் காய்க்கட்டும், தம்பி பிறக்கட்டும், அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும், உன்னைக் கூப்பிடப்போறேனோ?
விளக்கம்: தன்னை ஒரு சுப நிகழ்ச்சிக்கும் கூப்பிடவது இல்லை என்று குறைந்துகொண்டவளிடம் இவள் கூறியது.

Posted by: TamilPedia
கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
விளக்கம்: கடல் வற்றிவிட்டால் மீன்களைப் பச்சையாகத் தின்னாமல், காயவைத்துத் தின்னலாமே என்று காத்திருந்த கொக்கு உடல் மெலிந்து செத்ததாம்.

Posted by: TamilPedia
நனைத்து சுமக்கிறதா?
விளக்கம்: பாரம் உலர்ந்திருக்கும்போது அதை சுமந்து செல்லாதவன் அது நனைந்து மேலும் சுமையானபோது வருந்தினானாம்.

Posted by: TamilPedia
பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டுவருவான்.
விளக்கம்: நோயாளி பத்தியமாகச் சாப்பிட்டு குணம் பெறவேண்டி முருங்கைக்காய் வாங்கிவரப் போனவன், அதைத் தாமதித்து, நோயாளி இறந்துவிட்டதும் மூன்றாம் நாள் பால் தெளிக்க அகத்திக்கீரை வாங்கி வந்தானாம்.

Posted by: TamilPedia
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
விளக்கம்: வணிகன் தீர ஆலோசனை செய்தே ஒரு காரியத்தில் இறந்குவான். மூடனோ முன்யோசனையின்றிக் காரியத்தில் இறங்கிவிட்டுப் பின் விழிப்பான்.

Posted by: TamilPedia
ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான், பலபேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.
விளக்கம்: ஒருவனைக் கொன்றவனுக்கு தண்டனை விரைவில் கிடைத்து அவன் மாள்வான். ஆனால் பலரைக் கொன்றவன் பட்டம் ஆள்பவனாக இருப்பான்.

Posted by: TamilPedia
துறவிக்கு வேந்தன் துரும்பு.
விளக்கம்: துறவி தன் உயிரின் நிலைமையும் யாக்கை நிலையாமையும் நன்கு அறிந்தவர். எனவே ஒரு மன்னனின் ஆணைகள் அவரை ஒன்றும் செய்ய முடியாது.

Posted by: TamilPedia
அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி.
விளக்கம்: அம்மியில் எவ்வளவு அரைத்து வழித்தாலும் அதன் கல் அப்படியே இருக்கும். அதுபோல நாவிதன் அசிரத்தையாக முடி வெட்டினாலும், குடுமி நிச்சயம் தங்கும் (குடுமியைச் சிரைக்கக்கூடாது என்பது பழைய மரபு).

Posted by: TamilPedia
ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப் பாட்டில்லை.
விளக்கம்: ஏற்றம் இறைப்பவன் பாடும் பாடலை எதிரொலிப்பவர்களோ அல்லது எதிராகப் பாடுபர்வகளோ கிடையாது.

Posted by: TamilPedia
கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது.
விளக்கம்: தன் உரிமையாளன் வளையல் விற்பவனாக இருந்தபோது கழுதை அனுபவித்த வேதனையை, உரிமையாளன் மாறி வண்ணன் ஆனபிறகும் அனுபவித்ததாம்.

Posted by: TamilPedia
1.சாலாய் வைத்தாலும் சரி, சட்டியாய் வைத்தாலும் சரி.
2.சிரைத்தால் மொட்டை, வைத்தால் குடுமி.
3.வெளுத்து விட்டாலும் சரி, சும்மாவிட்டாலும் சரி.
விளக்கம்: மூன்று பழமொழிகளுக்குமே பொருள், யாராக இருந்தாலும் தான் செய்தது சரியே என்று வாதிப்பார்கள்.

Posted by: TamilPedia
தேளுக்கும் மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்துக்குக் கொட்டும்.
விளக்கம்: தேள் போன்ற கொடியவர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள்.

Posted by: TamilPedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...