Tamil Proverbs (தமிழ் பழமொழிகள்)

கட்டி அழுகிறபோது, கையும் துழாவுகிறது.
விளக்கம்: மரண துக்கத்திலும் அவளுக்குத் திருட்டுப் புத்தி போகாது.

Posted by: TamilPedia
தட்டான் தாய்ப்பொன்னிலும் மாப்பொன் திருடுவான்.
விளக்கம்: தன் தாய்க்கு நகை செய்தாலும் பொற்கொல்லன் அதில் கொஞ்சம் தங்கத் துகள் திருடுவான்.

Posted by: TamilPedia
சம்பந்தி கிரஹஸ்தன் வருகிறான், சொம்பு தவலை உள்ளே (அல்லது அங்கதமாக, வெளியே) வை.
விளக்கம்: நாணயமான நம் சொந்தக்காரர், அதாவது நம் சம்பந்தி வருகிறார், சொம்பு, தவலை முதலிய பித்தளைப் பாத்திரஙளை உள்ளே வை (அல்லது வெளியே வை).

Posted by: TamilPedia
நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.
விளக்கம்: இன்றுள்ள ஒருவரது ஜாதி போன தலைமுறைகளில் தொடர்ந்து அதுவாகவே இருந்திருக்க வாய்ப்பு குறைவு.

Posted by: TamilPedia
வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத்தோல் இடங்கொடுத்தார்கள், அது அறுத்து, ஊர் முழுதும் அடித்து, இது எனது என்றான்.
விளக்கம்: வியாபாரத்துக்கு வந்த வெள்ளைக்காரன், கொஞ்சம் இடம்கொடுத்ததால் நாட்டையே கைப்பற்றினான்.

Posted by: TamilPedia
ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
விளக்கம்: ஒரு நொண்டியை எருதில்மேல் ஏறி உட்காரச்சொன்னால், எருதுக்குக் கோபம் வருமாம். உட்கார்ந்தபின் அவனைக் கீழே இறஙச்சொன்னால் அவனுக்குக் கோபம் வருமாம்.

Posted by: TamilPedia
பணமும் பத்தாயிருக்கவேண்டும், பெண்ணும் முத்தாயிருக்கவேண்டும், முறையிலேயும் அத்தைமகளாயிருக்கவேண்டும்.
விளக்கம்: எல்லாவற்றிலும் துல்லியமாகக் கணக்குப்பார்பவனுக்குச் சொன்னது.

Posted by: TamilPedia
சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டதுபோல்.
விளக்கம்: தன் கோவணத்தப் பாதுகாக்க ஆசைப்பட்ட சந்நியாசி ஒரு குடும்பத்தையே தாங்கவேண்டி வந்தது.

Posted by: TamilPedia
பூனை கொன்ற பாவம் உன்னோடே, வெல்லம் திண்ற பாவம் என்னோடே.
விளக்கம்: பூனையைக் கொன்ற பாவம் உன்னைச் சேரட்டும், வெல்லத்தால் செய்த அதன் படிமத்தைத் தின்ற பாவம் என்னைச் சேரட்டும்.

Posted by: TamilPedia
ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல.
விளக்கம்: மிராசுதார் ஐயா தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார், அவர் மனைவியோ வீட்டில் உள்ள நெற்குதிர்போல் இருக்கிறாள்.

Posted by: TamilPedia
இடுவாள் இடுவாள் என்று ஏக்கமுற்று இருந்தாளாம்; நாழி கொடுத்து நாலு ஆசையும் தீர்த்தாளாம்.
விளக்கம்: யஜமானி நிறையக் கொடுப்பாள் என்று வேலைக்காரி ஆசையோடு இருந்தபோது, அவள் யஜமானி அந்த வேலைக்காரியின் நான்கு ஆசைகளையும் கால்படி அரிசி கொடுத்துத் தீர்த்துவைத்தாளாம்.

Posted by: TamilPedia
இலவு காத்த கிளி போல.
விளக்கம்: பருத்தி மரத்தின் காய் பழுத்தடும் என்று உண்ணக் காத்திருந்த கிளி போல.

Posted by: TamilPedia
ஏறப்படாத மரத்திலே எண்ணாயிரம் காய்.
விளக்கம்: ஒருவன் ஏறமுடியாத மரத்தில் எண்ணமுடியாத அளவுக்கு காய்களாம்.

Posted by: TamilPedia
கொல்லைக்காட்டு நரி பல்லைக் காட்டினது போல.
விளக்கம்: தோப்பில் உள்ள நரி பல்லைக் காட்டிப் பயமுறுத்தியதுபோல.

Posted by: TamilPedia
போனதுபோல வந்தானாம் புது மாப்பிள்ளை.
விளக்கம்: பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைத் தொடங்கி ஏமாந்தது போல.

Posted by: TamilPedia
கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
விளக்கம்: அரங்கில் ஆடியவன் கிழக்கில் எப்போது சூரியன் உதிக்கும் என்று பார்த்திருந்தான். கூலி வேலை செய்தவன் மேற்கில் எப்போது சூரியன் மறையும் என்று பார்த்திருந்தான்.

Posted by: TamilPedia
பாப்பாத்தி அம்மா, மாடு வந்தது, பார்த்துக்கொள்.
விளக்கம்:  பாப்பாத்தி அம்மா, உன் பசுக்களை இதோ வீட்டில் சேர்த்துவிட்டேன், இனிமேல் உன்பாடு.

Posted by: TamilPedia
முப்பது நாளே போ, பூவராகனே வா.
விளக்கம்: வேலையில் ஆர்வமில்லாது எப்போது மாதம் முடிந்து சம்பளம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனைக் குறித்துச் சொன்னது.

Posted by: TamilPedia
பட்டுப்புடவை இரவல்கொடுத்து, மணை தூக்கிகொண்டு அலைய வேண்டியதாச்சு.
விளக்கம்: ஒரு பட்டுப்புடவையை அவள் உடுத்த இரவல் கொடுத்தேன். கூடவே நான் ஒரு மணை ஆசனத்தை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே போகவேண்டி வந்தது!

Posted by: TamilPedia
அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகாது.
விளக்கம்: பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது, பிருஷ்டபாகத்தில் வந்த சிரங்குபோல.

Posted by: TamilPedia
1.அம்பலம் வேகுது.
2.அதைத்தான் சொல்லுவானேன்? வாயைத்தான் நோவானேன்?.
3.சந்தை இரைச்சலிலே குடியிருந்து கெட்டேனே.
விளக்கம்: 1.இந்தச் சத்திரம் பற்றி எரிகிறது.
2.அதைச் சொல்வது ஏன்? பின் என் வாய் வலிக்கிறது என்பானேன்?.
3.உங்கள் இருவரது சந்தை இரைச்சலில் குடியிருந்து நான் கெட்டேனே.


Posted by: TamilPedia
உத்தியோகம் தடபுடல், சேவிக்கிறவர்கள் இன்னாரினியார் என்றில்லை, சம்பளம் கணக்கு வழக்கில்லை, குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு.
விளக்கம்: என் வேலையில் ஒழிவில்லாத ஆடம்பரம்; யார்யாரோ என்னை அண்டி வணங்குகிறார்கள். எனக்கு வரும் சம்பளத்துக்குக் கணக்கு வழக்கில்லை. (இருந்தாலும்) எருதை விற்றுப் பதினைது ரூபாய் அனுப்பச் சொல்லு.

Posted by: TamilPedia
குந்தித் தின்றால் குன்றும் மாளும்.
விளக்கம்: குன்றளவு சொத்து உள்ளவனும் வேலையில்லாமல் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவன் சொத்து விரைவில் கரைந்துவிடும்.

Posted by: TamilPedia
நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை.
விளக்கம்: நடந்து செல்பவனுக்கு நாட்டில் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள். ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாகப் பாயில் படுத்தூங்குகிறவனை அந்தப் பாயும் வெறுக்கும்.

Posted by: TamilPedia
கொட்டிக் கிழங்கு பறிக்கச்சொன்னாள் கோபித்துக்கொள்வார் பண்டாரம், அவித்து உரித்து முன்னே வைத்தால் அமுதுகொள்வார் பண்டாரம்.
விளக்கம்: படைத்தால் உண்ணும் பண்டாரம் தான் வேலை எதுவும் செய்யமாட்டார்.

Posted by: TamilPedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...