Tamil Proverbs (தமிழ் பழமொழிகள்)

சுயகாரிய துரந்தரன், சுவாமி காரியும் வழவழ.
விளக்கம்: தன்காரியத்தில் குறியாயிருந்து அலுக்காமல் சலிக்காமல் அதை வெற்றியுடன் முடிப்பவன், அதுவே கடவுள் சம்பந்தமாக இருக்கும்போது ஏனோதானோ என்று முனைகிறான்.

Posted by: TamilPedia
குரங்குப்புண் ஆறாது.
விளக்கம்: குரங்கு தன்மேலுள்ள புண்ணை ஆறவிடுமா?

Posted by: TamilPedia
பழைய பொன்னனே பொன்னன், பழைய கப்பரையே கப்பரை.
விளக்கம்: (சமீபத்தில் மாறிவிட்ட) பொன்னன் மீண்டும் பழைய பொன்னன் ஆனான், புதிதாகக் கிடைத்த கப்பரையை விட பழைய கிண்ணமே மேல் என்று உணர்ந்தவனாய்.

Posted by: TamilPedia
கொள்ளை அடித்துத் தின்றவனுக்குக் கொண்டுதின்னத் தாங்குமா?
விளக்கம்:  திருடியே உண்பவன் உணவை வாங்கி உண்பானா?

Posted by: TamilPedia
குழந்தைக் காய்ச்சலும், குண்டன்/குள்ளன் காய்ச்சலும் பொல்லாது.
விளக்கம்: குழந்தையின் பொறாமையும் குண்டன் அல்லது குள்ளனின் பொறாமையும் எளிதில் தீராது.

Posted by: TamilPedia
கண்ணால் கண்டதை எள்ளுக்காய் பிளந்ததுபோலச் சொல்லவேண்டும்.
விளக்கம்: எள்ளுக்காய் முற்றிப் பிளக்கும்போது நெடுவாட்டில் சரிபாதியாகப் பிளவுபடும். அதுபோல கண்ணால் கண்டதை நடுநிலையுடன் விவரிக்கவேண்டும்.

Posted by: TamilPedia
மரத்தாலி கட்டி அடிக்கிறது.
விளக்கம்: மரத்தால் ஆன தாலியை ஒரு மணமான பெண்ணின் கழுத்தில் கட்டுவைத்துப் பின் அவளை அடிப்பது.

Posted by: TamilPedia
அங்கிடுதொடுப்பிக்கு அங்கு இரண்டு குட்டு, இங்கு இரண்டு சொட்டு.
விளக்கம்: கோள்சொல்லுவோனுக்கு எங்கும் எப்போதும் பிரச்சினைதான்.

Posted by: TamilPedia
குறவழக்கும் இடைவழக்கும் கொஞ்சத்தில் தீராது.
விளக்கம்: வேடுவர்கள், இடையர்கள் இவர்களின் சர்ச்சைகளை எளிதில் தீர்க்கமுடியாது.

Posted by: TamilPedia
மதுபிந்து கலகம்போல் இருக்கிறது.
விளக்கம்: துளித்தேனுக்காக சண்டைபோடுவதுபோல் இருக்கிறது.

Posted by: TamilPedia
மாரைத்தட்டி மனதிலே வை
விளக்கம்: கேட்ட வசைமொழிகளை மார்பைத் தட்டியபடி மனதில் இருத்திக்கொள்வது.

Posted by: TamilPedia
மௌனம் கலகநாசம்.
விளக்கம்: மௌனமாக இருப்பது கலகம் முடிந்ததுக்கு அறிகுறி.

Posted by: TamilPedia
ஶ்ரீரங்கத்துக் காக்காயானாலும் கோவிந்தம் பாடுமா?
விளக்கம்: காக்கை ஶ்ரீரங்கத்தில் பிறந்திருந்தாலும் அது கோவிந்தனைப் பற்றி அறியுமோ?

Posted by: TamilPedia
நெல்லு குத்துகிறவளுக்குக் கல்லு பரிக்ஷை தெரியுமா?
விளக்கம்: நெல்குத்தும் பெண் இரத்தினங்களை இனம்காண அறிவாளா?

Posted by: TamilPedia
 சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டதுபோல.
விளக்கம்: சணல்நார் எடுப்பவன் வீட்டுக்கோழி அந்த நார்களில் தானே சிக்கிக்கொண்டதுபோல. 

Posted by: TamilPedia
சேணியனுக்கு ஏன் குரங்கு?
விளக்கம்: நெசவு செய்பவன் ஒரு குரங்கை வளர்த்தால் தாங்குமா?

Posted by: TamilPedia
ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
விளக்கம்: ஒரு கொம்பில்லாத விலங்குகூட ஏழை என்றால் அவன்மேல் பாயும்.

Posted by: TamilPedia
அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல.
விளக்கம்: நாவிதன் மாப்பிள்ளையின் மீசை இதனால் மறைந்தே போயிற்று.

Posted by: TamilPedia
இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான்.
விளக்கம்: கொடுத்ததை வாங்குவதற்கு இரு கைகள் போதாமல் அவன் சமையல் கரண்டியையும் கட்டிக்கொண்டானாம்!

Posted by: TamilPedia
இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான்.
விளக்கம்: அவன் இருந்தபோதும் துன்பந்தான், இறந்தபோதும் துன்பந்தான்.

Posted by: TamilPedia
எண்பது வேண்டாம், ஐம்பதும் முப்பதும் கொடு.
விளக்கம்: கடன் வாங்குபவன் தான் கேட்ட ஐம்பது ரூபாய் கடனுக்கு வட்டியும் சேர்த்துத் தரவேண்டிய தொகை "எண்பதா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டபோது கடன் கொடுப்பவன் இவ்வாறு கூறினான்.

Posted by: TamilPedia
கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல.
விளக்கம்: மிகவும் மதித்து நம்பியிருந்த ஒருவன் கைவிட்டது குறித்துச் சொன்னது.

Posted by: TamilPedia
குருவுக்கும் நாமம் தடவி/போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டதுபோல.
விளக்கம்: ஒருவனை ஏமாற்றியதுமட்டுமின்றி அவனது உடைமைகளையும் பறித்துக்கொண்டது குறித்துச் சொன்னது.

Posted by: TamilPedia
பாட்டி பைத்தியக்காரி, பதக்கைபோட்டு முக்குறுணி என்பாள்.
விளக்கம்: கொடுத்தது கொஞ்சமேயானாலும் அதிக அளவு என்று கூறுவது.

Posted by: TamilPedia
சாப்பிள்ளை பெற்றாலும், மருத்துவச்சி கூலி தப்பாது
விளக்கம்: நல்லது நடக்காவிட்டாலும் நடத்திவைத்தவருக்குப் பேசிய தொகையை கொடுக்காமல் இருக்கமுடியுமா?

Posted by: TamilPedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...