உழைக்கும் வயதில் உறங்க நினைக்காதே பின்னர் நீ உறங்கும் வயதில் உழைக்க வேண்டி ஏற்படும்.
தன்னை நல்லவராக்க யாரை வேண்டும் என்றாலும் கெட்டவராக சித்தரிக்கும் உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நிம்மதி இல்லை என்று புலம்புவார்கள் வாழ்க்கையில் நிம்மதி வேண்டும் என்றால் உங்களுக்கு ஞாபக மறதி அவசியம். ஞாபக மறதி இருந்தால் உங்களால் நிம்மதியாக இருக்க முடியும்.
ஒருவர் உங்களுடன் பேச நேரம் இல்லை என்றால் நம்பாதீர்கள் அவர்களின் முன்னுரிமை பட்டியலில் நீங்கள் இல்லை என்பதே அர்த்தம்.
மனம் என்பது வயிறு போல அதற்கு எவ்வளவு தான் கொடுத்தாலும் சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் பசி எடுக்கும்.
சரியோ தவறோ ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுத்து உன் இதயம் சொல்வதை செய். ஏன் என்றால் அதன் விளைவுகளை தாங்கும் சக்தி உன் இதயத்திற்கு மட்டும் தான் இருக்கிறது.
ஒருவன் மிகப் பெரிய உயரத்தில் இருக்கலாம் ஆனால் அவனால் வாழ்நாள் முழுவதும் அந்த உயரத்திலே தங்க முடியாது.
ஒருவனுக்கு அளவுக்கு மீறிய சந்தோஷமும் அளவிற்கு மீறிய மனக் கவலையும் ஒருவனை நிம்மதி இல்லாமல் செய்து விடும். இவை இரண்டுமே ஆபத்தானவை தான்.
நாம் கடந்து சென்ற அனைத்தும் வாழ்க்கைக்கான பாதைகள் அல்ல. கடந்து வந்ததில் கற்றுக் கொண்ட பாடங்கள் தான் வாழ்க்கைக்கான பாதைகள்.
அனைவரினதும் வாழ்விலும் காயங்கள் இருக்கும் அந்த காயத்துடனும் சிரிப்பது அவ்வளவு எளிதல்ல காயங்களுடன் சிரிக்க ஒரு சிலரால் தான் முடிகின்றது. அப்படி சிரிக்க பழகிக் கொண்டால் எந்த காயமும் அவ்வளவு பெரிதல்ல.
உன்னை ஏமாற்றியவர்களை மன்னித்து விடு ஆனால் மறுபடியும் அவர்களை நம்பும் அளவிற்கு இருந்து விடாதே மீண்டும் அதே தவறை செய்து விடாதே.