காயப்படுத்திய உறவுகளை
கடந்து போகும் சூழல் வந்தால்
சிரித்துக்கொண்டே
கடந்து செல்லுங்கள்..
கன்னத்தில் அறைவதை விட
அதிகம் வலிக்கட்டும்.
சின்ன சின்ன மாற்றங்கள்
நம் வாழ்க்கையை திசையறியாமல்
திருப்பி போட்டு விடுகிறது..
அதிலும் பிடித்த உறவுகளின் மாற்றம்
நம்மை மிகப்பெரிய
ஏமாற்றத்தில் தள்ளுகிறது.!
உறவுகளை தேடுவதை
அடியோடு நிறுத்தி விட்டேன்..
உள்ளம் சொல்கிறது
சோகங்கள் போதுமென்று.!
மரணத்தை விட கொடூரமானது..
நாம் நேசிப்பவர்
நம்மை வெறுப்பதும் மறப்பதும்..!
உணர்வுகளற்ற உறவுகளிடம்
உறவு கொண்டாடுவதை விட
உதறி செல்வது சிறப்பு.
தேவையில்லாத ஒன்றுக்கும்
தேவையில்லாதவர்களுக்கும்
முக்கியத்துவம் எப்போது கொடுகின்றமோ..
அப்போதே வலியும் வேதனைகளுக்கும்
நாமே வழியை ஏற்படுத்திக் கொள்கிறோம்.!
உண்மையை சொன்னால்
கசப்பாக தான் இருக்கும் என்று
சொல்லாமல் மறைப்பதால்
நாம் பொய்யானவர்களாக
மாறிவிடுகிறோம்.
வாழ்வின் முன்னேறி உயரச் செல்லுங்கள்..
தேவையென்றால் மட்டுமே கீழிறங்குங்கள்..
சிலருக்கு தேவைப்படும்போது
நாம் தேடப்படுவோம்
அதுவரை உயரவே இருப்போம்.
பொய்யான உறவுகளிடம்
உண்மையான அன்பை கொடுத்து
ஏமாந்தவர்கள்
உண்மையான அன்பு கிடைத்தால் கூட
அதை ஏற்றுக் கொள்வதற்கு தயங்குவார்கள்..
ஏனென்றால் அவர்கள்
கடந்து வந்த பாதையில்
அனுபவித்த வலிகள் ஏராளம்.!
பிடித்ததை செய்ய தடுப்பவர்களிற்கு
அவர்களோடு பழகவோ
சரி சமனாக கதைப்பதோ
எத்தனிக்க கூடாது..
மாறாக விலகி இருப்பதும்
அவர்களோடு உறவை
அளவாக வைப்பதும் வாழ்க்கைக்கு
சிறந்ததாக அமையும்.
ஏங்கும் போது கிடைக்காத உறவு
அதன் ஏக்கம் முடிந்த பின்
கிடைத்து எந்த பயனுமில்லை.
வாழ்க்கை கற்றுக் கொடுப்பது
ஒன்றுதான்
வெறுப்பவர்களை தேடாதீர்கள்
விரும்புபவர்களை விட்டு விடாதீர்கள்.!
இதயத்தில் ஏற்படும்
காயத்திற்கு மருந்து அன்பு..
அந்த காயம் ஏற்படுவதற்கான
காரணமும் அதே அன்பு தான்.!
நம் கோபமும் தவறான
புரிந்துணர்வும் தான்
நாம நேசிக்கும் உறவை
நம்மிடம் இருந்து பிரிய
காரணமாக
அமைந்து விடுகிறது.!!
உன்னை விட்டு விலகி செல்பவை
எதுவாக இருந்தாலும்
சந்தோசமாக வழி அனுப்பி வை..
நீ இழந்ததை விட தரமானதை தர
வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கின்றது.
உறவுகள் இரண்டு வகைப்படும்
ஒன்று அன்பை தரும்..
மற்றொன்று அனுபவத்தை தரும்..
அன்பைத் தரும் உறவை
மனதில் வை..
அனுபவத்தை தரும் உறவை
நினைவில் வை.!
தேனைப் போன்று இனிமையாக பேசி..
தேளைப் போன்று கொட்டிவிட்டு
செல்பவர்கள் அதிகம்.
யாரை நாம் உதாசீனப்படுத்துகிறமோ..
அவர் உதவியை வேண்டிச்செல்லும்
நிலைமையை காலம்
நிச்சயம் உணர்த்தும்.
நீ மேலே இருந்து பார்க்கும் போது
மற்றவர்கள் சிறியவர்களாக
தெரியலாம் ஆனால்..
நீயும் அவர்களில்
ஒருவன் தான்
என்பதை மறந்து விடாதே.!
ஒரு சிலரை பார்த்தவுடன்
அவர்கள் மீது அன்பு வரும்..
பழகிய பின் உண்மையானவர்கள்
என்று புரியும் போது
மரியாதை வரும்..
அன்பு மலர்ந்து மரியாதையாக
மிளிரும் போது மனதில்
நம்பிக்கை தோன்றும்.!
சண்டையிடும் போது
அமைதியாய் இருப்பவர்கள்
தவறு செய்தவர்கள் அல்ல..
வார்த்தைகளை விட்டால்
உறவு பிரியும் என்று
உணந்தவர்கள்.