பிறரிடம் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவது அவருக்கு நன்மை செய்வதுதான். ஆனால் அதனினும் உயர்வானது அவரிடம் உள்ள நிறைகளைப் பாராட்டுவது.
கஷ்டம் வந்தால் கண்டுகொள்ளாத நண்பனும் பணம் இருந்தால் பாசம் பொழியும் உறவும்.. இருந்தாலும் ஒன்றுதான் இல்லாமல் போனாலும் ஒன்றுதான்..!
வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்று தருகிறது.. அதில் ஒன்று தான் யார் யாரிடம் எப்படி பழக வேண்டும் எந்தளவுக்கு பழக வேண்டும் என்பது.
தேவை என்றால் வரும் உறவுகளையும் தேவையில்லாமல் வரும் உணர்வுகளையும் ஒதுக்கி வைக்க பழகிக்கொள்ளுங்கள் நிம்மதி உங்களை தேடி வரும்.
நீ ஒருவரை பற்றி தவறான செய்திகளை கூறி அழிக்க நினைத்தால்.. உன்னை ஒருவன் மற்றொரு இடத்தில் மிக கேவலமாக சொல்லி அழித்து விடுவான்.. இயன்றவரை எவரை பற்றியும் புறங்கூறாமல் வாழ பழகிக் கொள்வோம்.
ஒருவர் இப்படி தான் என மனதால் தீர்மானித்து விட்டால் அவர் நன்மையே செய்தாலும் மனம் குறைகளை மட்டும் தான் தேடும்.. அவர் நல்லவராக இருந்தாலும் குறைகளை மட்டும் தான் சொல்ல தோன்றும்.!
ஒவ்வொருவரும் நன்றாகவே நடிக்கிறார்கள் ஆனால் தனக்கு நடிக்கவே தெரியாதென்று சொல்லிக்கொள்கிறார்கள்
வலி தந்த உளிகளுக்கு நன்றி.. நீங்கள் இல்லை என்றால் கல்லாகவே இருந்திருப்பேன்.!
பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்வது கொலை செய்வதற்கு சமம்.. தற்பெருமை பேசுவது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்.!
நன்றி கெட்ட மனிதன் இறந்தால் அவன் உடலை அடக்கம் செய்யும் இவ்வுலகம் நன்றியுள்ள நாய் இறந்தால் அடக்கம் செய்வதில்லை.. நன்றி கெட்ட உலகம் இது.!
அவரவர் தேவைக்கு மட்டும் தேடப்படுகிறோம்.. உறவுகள் என்ற போர்வையில்.!
செய்ததை சொல்லிக் காட்டுவது குற்றம் தான்.. ஆனால் நன்றியில்லாமல் மறந்து போவது பெரிய பெருங்குற்றமாகும்.!
தேவை என்றால் பழகுவதும் தேவை முடிந்ததும் விலகுவதும்.. துன்பத்தில் உடன் இருந்தவருக்கே துன்பம் செய்வதும் மனிதனின் இயல்பு.!
தேவைக்கு பயன்படுத்தி விட்டு தேவை இல்லையெனில் தூக்கி எறியும் நன்றி கெட்ட உலகம் இது.. நன்றி மறந்த உலகத்தில் நன்றியை எதிர்பார்த்தால் உலகில் மிகப்பெரிய முட்டாள் நீ தான்.!
நன்றி மறந்தவர்களை எண்ணி நீ நிம்மதி இழக்காதே.. உன் உதவியை மனிதர்கள் மறந்தாலும் காலம் மறப்பதில்லை.!
இன்றைய உலகம் நன்றிகளை புதைத்து விட்டு வாழும் மனிதர்களை கொண்டது.
நன்றி கெட்ட உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் மற்றவர்களிடம் நன்றியை எதிர்பாராமல் நீங்கள் வாழ பழகிக் கொள்ளுங்கள்.