ஆறுதலுக்கு ஆள் இல்லை என்று எண்ணாதே..
சில நேரங்களில் உன் தனிமையே உனக்கு ஆறுதல்.
எல்லோருக்கும்
பிடித்தவளாக தான்
இருக்கிறேன்
இருந்தும் ஏனோ
இந்த தனிமை
காதலும் கொரோனாவும் ஒன்னு..
இரண்டுல எது வந்தாலும் தனிமைப் படுத்தப்படுவாய்.
நிலவில் வாழ்வது போல் உன் நினைவில் வாழ்கிறேன்
யாருமில்லா தனிமையில்.
தனிமையில் இருப்பவனை பைத்தியம் என்று சொன்ன உலகம்.
தனிமையில் இருப்பதே வைத்தியம் என்கிறது இன்று..
வலுக்கட்டாயமாக உறவுகளை நம் வாழ்க்கையில் தங்க வைத்து அவர்களின் போலியான அன்பைப் பெறுவதைக் காட்டிலும் தனிமை எவ்வளவோ மேல்..
மனக்குழப்பங்கள் தீரும் வரை மௌனமாகவும் தனிமையாகவும் இருப்பதே நல்லது.
மனக் குழப்பத்திற்கு நல்ல தீர்வு தனிமை..
மனக்காயங்களுக்கு நல்ல மருந்து மௌனம்..
தனிமை என்பது வலி என்று யார் சொன்னது?
தனிமை என்பது வழி..
நம்மை பற்றி நமக்கே புரிய வைக்கும் நிலை..
தனிமை என்பது யாரும் இல்லாமல் இருப்பது அல்ல..
நம்மை சுற்றி எல்லோரும் இருந்தாலும் நமக்காக யாருமில்லை என்று உணருவதே தனிமை..
ஆண் தனது கண்ணீரை
அதிகபட்சம் தன் தலையணைக்கும்
தனிமைக்கும் மட்டுமே
தெரியப்படுத்துவான்..
அருகில் இருந்தும்
போலியாக உள்ள
உறவை விட..
யாரும் அற்ற
தனிமையின் வேதனை
மேலானது..!
சந்தோஷம் என்பது மற்றவர்கள் முன் சிரிப்பது அல்ல..
தனிமையில் இருக்கும் போது அழாமல் இருப்பது
யாருக்கும் உன்னை பிடிக்கவில்லை என்று கலங்காதே
தனிமைக்கு உன்னை மிகவும் பிடித்து விட்டது. அதனால்தான் உன்னை பிரிய மனம் இல்லை.
அன்பும் வேண்டாம்.. ஆறுதலும் வேண்டாம்..
எந்த உறவும் வேண்டாம்..உறவால் வரும் பிரிவும் வேண்டாம்.
பிரிவால் படும் காயங்களும் வேண்டாம்.
என்றும் நிலையான இந்த தனிமையே போதும்.
அழுபவர்களை விட்டு விடுங்கள். அவர்களுக்கு வார்த்தைகளை விட சில நேரங்களில் தனிமை தான் சிறந்த ஆறுதலாக இருக்கும்.
உன் சந்தோஷத்தை அடுத்தவரிடம் தேடாதே..
அது உனக்கு தனிமையை மட்டுமே தரும்..
உன் சந்தோஷத்தை உன்னுள் தேடி மகிழ்ச்சியாய் இரு..
தயவு செய்து திரும்பி வந்து விடாதே - இனியும் உனக்காய் என்னால் காத்திருக்க முடியாது.
நாட்கள் கடந்ததால் நானும் ஒரு துணையை தேடி விட்டேன் - அவன் பெயர் தனிமை. - Neduntheevu Mukilan
தனிமையின் நிழலில் தான்
உன்னைப் பற்றியும்
பிறரைப் பற்றியும்
உண்மைகளை உணர முடியும்!
தனிமையில் கூட என்னை சிரிக்க வைக்க அவள் நினைவுகளால் மட்டுமே முடியும்.
தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை;
அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை. - M. Karunanidhi
தனிமை கொஞ்சம் வித்தியாசமானது.
நாமே அதை எடுத்துக் கொண்டால் அது இனிக்கும்
மற்றவர்கள் நமக்கு அதை கொடுத்தால் கசக்கும்.
தனிமை எனக்கு
மிகவும் பிடிக்கும்.
காரணம்..?
மனதை காயப்படுத்த
அங்கே எவரும்மில்லை..!