அதிர்ச்சியை அலட்சியமாக கடக்க பேரதிர்ச்சியை அனுபவித்தவர்களால் தான் முடியும்.
குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் ஏனென்றால் உங்களை நீங்களே செதுக்கி கொள்வதற்கு அவர்கள் தான் உளி கொடுக்கின்றனர்.
ஒருபோதும் தவறு செய்யாத எவரும் புதியதை முயற்சித்ததில்லை...
முடிவுகள் எடுக்க கஷ்டப்படுகிறீர்களா? முடிவெடுக்கும் போது உங்கள் உள்ளுணர்வுகளை கவனியுங்கள்.
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
விதி ஆயிரம் கதவுகளை மூடினாலும், முயற்சி ஒரு ஐன்னலையாவது திறக்கும் முடங்கி விடாதே தொடர்ந்து முயற்சி செய்..
நல்லது எது? கெட்டது எது? என்பதை யார் சொன்னாலும் அனைவரின் கூற்றையும் நீ நம்பலாம்... ஆனால் ஆராய மட்டும் மறந்து விடாதே... உன் சுய சிந்தனையை முடக்கி விடாதே....
என் தோல்விக்குப் பின்னால் நான் மட்டுமே இருப்பேன், ஆனால் என் வெற்றிக்குப் பின்னால் நான் பட்ட ஆயிரம் வலிகள் இருக்கும்...
வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை தோல்வி எனும் தடைகள் உன் கண் முன்னே காணப்படுவது இல்லை.
ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம்... அதுவே நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்...!!
நதியில் வெள்ளம்! கரையில் நெருப்பு !! இரண்டுக்கும் நடுவில் இறைவன் சிரிப்பு !!!
நீங்கள் ஒன்றை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறீர்கள் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில், சூழ்நிலை உங்களை அதிலிருந்து விலகச் செய்யும் அல்லது அது உங்களை விட்டு விலகிவிடும்!
நபர்களுக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு நடிக்கத் தெரிந்தால் நீங்கள் தான் உலகின் மிகச் சிறந்த நல்லவர்
வரும் கனவையெல்லாம் நிஜமென்று நம்ப சொல்கிறது இரவு அவை யாவும் பொய் என்று நிரூப்பித்து விடுகிறது பகல்
காலை நேரம் வருவதெல்லாம் இரவு நேரம் வருவதற்கே அதுபோல கவலைகள் வருவதெல்லாம் சந்தோஷங்கள் வருவதற்கே
இழப்பை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் வாழ கற்றுக் கொடுக்கும்
உண்மையாய் இருப்பது உண்மையில் பயனின்றி தான் போகிறது ஆனாலும் இருக்க விரும்புகிறேன் எப்போதும் உண்மையாய்
கடந்து போகட்டும் என காத்திருப்பதை விட காலத்தோடு போட்டி போட்டு முன்னேறுவதே சிறந்தது
பேருந்தில் இருக்கைகாக ஓடுவது போல வாழ்க்கை எனும் பயணத்தில் காதல் என்ற இருக்கைக்காக பலர் ஓடுகின்றனர்
எத்தனையோ நபர்கள் நம்மை கடந்து சென்றாலும் யாரோ ஒருவர் மட்டும் மனதிற்கு நெருக்கமாய் தங்கி விடுகின்றனர் அவர்கள் அருகில் இல்லை என்றாலும்
வாழ்க்கை எனும் பந்தயத்தில் கீழே விழும் போது எழுந்து ஓடுவதற்கான வழிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கா விட்டால் வலிகள் உங்களைத் தேர்ந்தெடுக்கும்
ஒவ்வொருவரின் இதயமும் மண் பொம்மை போலவே நாம் விரும்பியவர்கள் விலகிச் சென்றதும் அது உடைந்து உபயோகமில்லாமல் போய் விடுகிறது
தேடுவதற்கு யாராது இருந்தால் தான் தொலைந்து போவதில் கூட சுவாரசியம் உண்டு
வார்த்தைகளால் விவரிக்க இயலாத சில வலிகளுக்கு என்றுமே புன்னகை மட்டுமே மருந்தாகிறது
எத்தனை தூரமானால் என்ன வார்த்தைகள் மொழிகள் தேவையில்லை சில உறவுகளுக்கு