தொலைவாக நீ போனால் தொடர்கிறது உள்ளமும் உன்னிடம் தொடும் தூரம் வந்துவிடு என்றே
என்னில் உனையும் உன்னில் எனையும் மனங்கள் சூடிக் கொண்டபின் மலர் மாலைகளும் ஏனோ
குளிருக்கு இதமாய் தேனீராய் மனதுக்கு இதமான போர்வையாய் உன் நினைவு
உடன் நீயிருந்தால் பொன்நகை அணியாமலேயே ஜொலிக்கும் மனம் புன்னகையில் என் மகிழ்ச்சியின் முகவரி நீ
தனிமையெனும் பஞ்சணையில் நம் நினைவுகளே எனை இதமாய் தாங்கும் தலையணை
அவசர பயணத்தின் போதெல்லாம் ஆறுதல் பரிசு கேக்கிறாய் ஒரு முத்தம் என்று
என் விலகளில் உன் நெருக்கமும் உன் விலகளில் என் நெருக்கமுமே நம் காதலுக்கு என்றும் முற்றுப்புள்ளியில்லா தொடர்கதைகிறது
பல கிண்ணங்கள் தீர்ந்தும் வராத போதை உன்னிதழ் கிண்ணம் தீண்ட வந்தது
சுவாசத்தில் எனை மீட்டி கொண்டிருக்கிறாய் நானும் உன் இதய வீணைதான்
முகம் பார்க்கும் கண்ணாடியாய் பார்த்து ரசிக்கிறேன் என் கரத்தோடு இணைந்த உன் கைரேகையை
தடையின்றி துடிக்கும் என் இதயம் நீ விடைபெற தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்
ஏன் வந்தாய் எப்படி வந்தாய் என்றெல்லாம் தெரியாது ஆனால் எங்குமாய் நிறைந்து விட்டாய் எனக்குள்
பருகி முடித்தபின்னும் தித்திக்கும் தேனீரின் சுவையாய் நீ தந்ந முத்தங்களும் சுவைக்கிறது எச்சில் உலர்ந்த பின்னும்