சில அவமானங்களுக்கும் அனுபவங்களுக்கும் பிறகு வாழ்க்கை ஒரு புதிய கோணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதுதான் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருக்கும் பலருக்கு..!
நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது வாழ்க்கை.. மென்மையாக பேசும்போது இனிமையாகவும் வன்மையாகப் பேசும்போது கசப்பாகவும் இருக்கும்.. புரிந்து கொண்டால் வாழ்க்கை உன்கையில் வளமே உன் வாழ்க்கையில்.
பிறரை கௌரவிக்க எல்லா இடத்திலும் பணம் தேவைப்படுகிறது.. ஆனால் வாழ்க்கையில் எந்த இடத்திற்கும் வர பொறுமைதான் பெரும்பாலும் தேவைப்படுகிறது.
எந்தவொரு விஷயத்தையும் புதிய கோணத்தோடு பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.. நிச்சயமாக தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
மனதை பூப்போல் வைத்திருங்கள்.. மனது விரியும்போது தான் நல்ல எண்ணங்கள் மழைபோல கொட்டும்.. புதிய சிந்தனைகள் பிறக்கும்.
சில இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை.. அதை வலியாக ஏற்றுக் கொள்வதும்.. வலிமையாக மாற்றிக் கொள்வதும் நம் எண்ண ஓட்டங்களே.
வாழ்க்கையில் உயர.. ஒரு மனிதன் உயர்வான எண்ணங்களை தனக்குள் உருவாக்கிக் கொண்டாலே போதும்.
நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும்.. அற்புதங்கள் நடக்கும்.. ஆனந்தமாய் இருங்கள்.
வாழ்க்கையே இருளென்று நினைத்து வருத்தப்படாதீர்கள்.. பல சாதனையாளர்களின் கனவுகள் முளைத்தது இருளில் தான்.
நாம் ஏதோ ஒரு இடத்தில் நிராகரிக்கப்பட்டால் அல்லது தோல்வி அடைந்தால்.. அதை நினைத்து வருந்தாமல் அதை விட ஒரு சிறப்பு வாய்ப்பு நமக்காக காத்திருக்கிறது என்ற எண்ணங்களோடு அடுத்த அடியை வைப்போம்.
நெருப்பு தான் தங்கத்தை உருக்கி அழகாக்கிறது அதேபோல துன்பம் தான் மனிதனை செதுக்கி உயர்வாக்கிறது.
ஆயிரம் கவலைகள் வந்தாலும் அதை கண்டுகொள்ளாதவரின் வாழ்க்கை எப்போதும் மிகச்சிறப்பாக இருக்கும்.
பிறரை திரும்பிப்பார்க்க வைக்க முகஅழகு தேவை.. மகிழ்ச்சியாக வாழ நல்எண்ணங்களை வளர்த்தாலே போதும்.
எண்ணங்களை உயரத்தில் வை.. சிறு சிறு சந்தர்ப்பங்களும் தெளிவாக தெரியும்.
தக்க சமயத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் பயன் கருதாமல் செய்யும் போது அதன் மதிப்பு இந்த உலகத்தை விட மிகப் பெரியது.
காயம் இல்லாமல் கனவுகள் காணலாம் ஆனால் வலிகள் இல்லாமல் வெற்றிகள் உணர முடியாது.
போராடு போராடு.. தோற்றாலும் போராடு சாகும் வரை போராடு.. நீ செத்து போனாலும் சரித்திரம் உன் பெயரை சொல்லும்.
வெற்றியால் உன் வீரத்தை கூட்டலாம்.. ஆனால் தோல்வியால் மட்டும் தான் உன் திறனை கூட்டலாம்.
புதைபட்டு விட்டோம் என்று புலம்பாதே.. புதைக்காமல் விதைக்கும் விதை மரமாக மாறாது.
வெற்றியின் பக்கங்கள் பெரும்பாலும் தோல்வி வரிகளாலேயே நிரப்பப்படிருக்கும்.
வெற்றி எனும் தேடலுக்கு முன் தோல்வியை கடந்தால்தான் வெற்றியை காணமுடியும்.
உடைக்கப்படும் போதும்.. ஒதுக்கப்படும் போதும்.. வெறுக்கப்படும் போதும்.. நம்பிக்கையுடன் போராடினால் கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.!
தகுதி இருந்தால் அனைத்தும் தேடி வரும்.. தன்னம்பிக்கை இருந்தால்தான் எதிலும் வெற்றி பெற முடியும்..!
எதையும் எதிர்க்க துணிந்துவிட்டால் பாதி வெற்றிக்கு சமம்.. எதையும் கடக்க பழகுவதை விட.. ஒருமுறையேனும் எதிர்க்க பழகு.!