தனிமையில் இருக்கவும்
கற்றுக் கொள்ளுங்கள்.
எல்லோரும் வர மாட்டார்கள்..
இறுதிவரை நம்முடன்...!
தனிமை..
நானாக தேடிக்கொண்ட
சாபம் இல்லை..
நான் உயிராய் நேசித்தவர்கள்
எனக்கு அள்ளித்தந்த வரம்..!
போலியான உறவுகளுடன்
பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட
தனிமை ஒன்றும் கொடுமை அல்ல..!!
அருகில் இருந்தும் போலியாக உள்ள உறவை விட.. யாரும் அற்ற தனிமையின் வேதனை மேலானது..!
பல கஷ்டங்களை கண்டு மரத்துப் போன என் இதயத்திற்கு தனிமையே போதுமானதாக இருக்கின்றது.
தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம்.. ஏமாற்றிச் செல்லும் உறவுகளை விட தனிமையே நம்முடன் பலகாலம் வாழ்கின்றது.
தனிமை என்பது என்னைப் பைத்தியம் ஆக்கிக் கொண்டிருக்கின்றது.. ஆனால் நீயோ அமைதியாக இருந்து வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டுப் பேச துணை இல்லாத போதுதான் தெரியும் தனிமையின் கொடூரம்.
எதுவும் சில காலம் தான் இதைப் புரிந்து கொண்டால் தனிமை இனிமையாக இருக்கும்.
தனிமை என்பது தனியாக இருப்பதில்லை.. அனைவரும் இருந்தும் நமக்காக யாரும் இல்லாது போல் உணர்வதே தனிமை.!
போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட.. தனிமை ஒன்றும் கொடூரமானது இல்லை.
வலிகளையும் வேதனைகளையும் தரும் உறவுகளுடன் இருப்பதை விட.. தனிமையில் இருப்பது மன நிம்மதியை தரும்.
தனிமையின் வேதனையை உணர்வதற்கு யாருடைய பிரிவும் அவசியமில்லை.. உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாத உறவுகள் போதும்.
அருகில் இருந்தும் போலியாக இருக்கும் உறவுகளுடன் இருப்பதை விட.. தனிமையில் இருப்பது மேலானது.
வாழ்க்கையில் தனிமையில் இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.. நம்முடன் இறுதி வரை யாரும் வரப்போவதில்லை.
ஆறுதல் இன்றி தனிமையில் அழுது முடித்த பின் வரும் தன்னம்பிக்கை மிகப் பெரியது..!
வாழ்க்கையில் நான் நினைப்பதெல்லாம் கிடைக்காமல் போகும் போதெல்லாம் எனக்கு தானாக வந்து ஆறுதல் சொல்கின்றது தனிமை.
உரிமையோடு சிலரை உறவென்று நினைத்தது தவறென்று புரிந்து கொண்டேன்.. மீண்டும் தனிமையே போதும் என்று விலகிக் கொண்டேன்.
தனிமை என்பது நான் தேடிக்கொண்ட சாபம் அல்ல நான் என் உயிருக்கும் மேலாக நேசித்தவர்கள் எனக்கு அளித்த பரிசு.
இன்று நானும் தனிமையில்.. நான் காட்டிய அன்பும் தனிமையில்.. என் வாழ்வும் தனிமையில்..!
பேச யாரும் இல்லை என்பதை விட பேசுவதைக் கேட்க யாருமில்லை என்பது தான் தனிமையின் கொடூரம்.
தூக்கம் வந்தாலும் தூங்காமல் நமக்கு பிடித்தவர்களை தனிமையில் நினைத்துக்கொண்டு இருப்பதும் ஒரு தனி சுகம் தான்.
தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை.
பல உறவுகளால் தரமுடியாத ஆறுதலையும் நிம்மதியையும் சில நேரம் தனிமை தந்துவிடும்.