"குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால், என்ன கதி ஆகும்?"
பழமொழின் விளக்கம்
பழமொழி:
குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால், என்ன கதி ஆகும்?

பொருள்:
குரங்கு என்பது ஒரு நிலையில் நில்லாது மனம் போனபோக்கில் ஆடும் விலங்கு. அது கள்ளும் குடித்து, பின் அதற்குப் பேய் பிடித்து, அதன்பின் அதனைத் தேளும் கொட்டிவிட்டால், குரங்கின் கதி என்ன?

Transliteration:
Kuranku Kallum Kutittu, Peyum Pitittu, Telum Kottinal, Enna Kadhi Akum?.

விளக்கம்:
நம் மனமே குரங்கு. கள் குடிப்பது ஆணவ மலத்தால் நாம் செய்யும் செயல்கள்; பேய் பிடிப்பது நாம் மாயை என்கிற மலத்தால் அவதியுறுவதைச் சொல்வது; நம்மைத் தேள்கொட்டுவது கன்ம/கரும மலம்: நாம் முன் செய்த வினைகளின் பயன். இந்த மூன்று மலங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு ஜீவாத்மாவின் கதி என்ன ஆகும்?.