Thirukkural No: 13/1330



விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

Vinindru Poippin Virineer Viyanulakaththu
Ulnindru Utatrum Pasi

குறள் எண்: 13
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : வான்சிறப்பு
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்

சாலமன் பாப்பையா விளக்கம்:

உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்

கலைஞர் விளக்கம்:

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்

மணக்குடவர் விளக்கம்:

வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.

வீ. முனிசாமி விளக்கம்:

மழையானது வேண்டுங் காலத்தில் பெய்யாமல் இருந்துவிட்டால், கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசியானது நின்று எல்லா உயிர்களையும் துன்புறுத்தும்.

பரிமேலழகர் விளக்கம்:

விண் இன்று பொய்ப்பின் - மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின், விரி நீர் வியன் உலகத்துள் - கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண், நின்று உடற்றும் பசி - நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி. (கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், விரி நீர் வியன் உலகத்து என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.).
English Translation:
Let clouds their visits stay, and dearth Distresses all the sea-girt earth
English Explanation:
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world
English Couplet:
If clouds, that promised rain, deceive, and in the sky remain,Famine, sore torment, stalks oer earths vast ocean-girdled plain
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Blessing of Rain (Vaansirappu)

Search Incoming Terms:

குறள் 13, விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், வான்சிறப்பு திருக்குறள், விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து திருக்குறளின் விளக்கம், vinindru poippin virineer viyanulakaththu thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, vaansirappu thirukkural, vinindru poippin virineer viyanulakaththu thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...