Thirukkural No: 612/1330



வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai
Theerndhaarin Theerndhandru Ulaku

குறள் எண்: 612
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : ஆள்வினை உடைமை
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

கலைஞர் விளக்கம்:

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்

மணக்குடவர் விளக்கம்:

வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று. இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று - வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் - அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக. (குறை - இன்றியமையாப் பொருள். அது 'பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே' (புறநா.188) என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.
English Translation:
In doing work dont break and shirk The world will quit who quits his work
English Explanation:
Take care not to give up exertion in the midst of a work, the world will abandon those who abandon their unfinished work
English Couplet:
In action be thou, ware of acts defeat,The world leaves those who work leave incomplete
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Manly Effort (Aalvinaiyutaimai)

Search Incoming Terms:

குறள் 612, வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், ஆள்வினை உடைமை திருக்குறள், வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை திருக்குறளின் விளக்கம், vinaikkan vinaiketal ompal vinaikkurai thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, aalvinaiyutaimai thirukkural, vinaikkan vinaiketal ompal vinaikkurai thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...