Thirukkural No: 11/1330



வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

Vaannindru Ulakam Vazhangi Varudhalaal
Thaanamizhdham Endrunarar Paatru

குறள் எண்: 11
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : வான்சிறப்பு
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

சாலமன் பாப்பையா விளக்கம்:

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது, அதனால் மழையே அமிழ்தம் எனலாம்

கலைஞர் விளக்கம்:

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது

மணக்குடவர் விளக்கம்:

மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது. இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.

வீ. முனிசாமி விளக்கம்:

மழை இடைவிடாமல் பெய்வதால் உலகிலுள்ள உஉயிர்கள் நிலைபெற்று வருகின்றன. ஆதலால், மழையே அமிழ்தம் என்று அறியப்படும் தன்மை உடையதாகும்.

பரிமேலழகர் விளக்கம்:

[அஃதாவது ,அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.] வான்நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான், தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. ( நிற்ப என்பது நின்று எனத் திரிந்து நின்றது. உலகம் என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை அமிழ்தம் என்று உணர்க என்றார்.).
English Translation:
The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall
English Explanation:
By the continuance of rain the world is preserved in existence, it is therefore worthy to be called ambrosia
English Couplet:
The world its course maintains through life that rain unfailing gives,Thus rain is known the true ambrosial food of all that lives
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Blessing of Rain (Vaansirappu)

Search Incoming Terms:

குறள் 11, வான்நின்று உலகம் வழங்கி வருதலால் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், வான்சிறப்பு திருக்குறள், வான்நின்று உலகம் வழங்கி வருதலால் திருக்குறளின் விளக்கம், vaannindru ulakam vazhangi varudhalaal thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, vaansirappu thirukkural, vaannindru ulakam vazhangi varudhalaal thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...