Thirukkural No: 22/1330



துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

Thurandhaar Perumai Thunaikkoorin Vaiyaththu
Irandhaarai Ennikkon Tatru

குறள் எண்: 22
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார் பெருமை
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது

சாலமன் பாப்பையா விளக்கம்:

ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்

கலைஞர் விளக்கம்:

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது

மணக்குடவர் விளக்கம்:

காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். து பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.

வீ. முனிசாமி விளக்கம்:

முனிவர்களது பெருமையினை எண்ணிப்பார்த்து இவ்வளவென்று கூறப்புகுந்தால், அச்செயல் இவ்வுலகில் இதுவரை இறந்தவர்களை எண்ணியறிய முயன்றது போன்றதாகும்.

பரிமேலழகர் விளக்கம்:

துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான், வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், கொண்டால் என்னும் வினை எச்சம் கொண்டு எனத் திரிந்து நின்றது.).
English Translation:
To con ascetic glory here Is to count the dead upon the sphere
English Explanation:
To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead
English Couplet:
As counting those that from the earth have passed away,Tis vain attempt the might of holy men to say
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Greatness of Ascetics (Neeththaar Perumai)

Search Incoming Terms:

குறள் 22, துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், நீத்தார் பெருமை திருக்குறள், துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து திருக்குறளின் விளக்கம், thurandhaar perumai thunaikkoorin vaiyaththu thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, neeththaar perumai thirukkural, thurandhaar perumai thunaikkoorin vaiyaththu thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...