Thirukkural No: 12/1330



துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth
Thuppaaya Thooum Mazhai

குறள் எண்: 12
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : வான்சிறப்பு
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

சாலமன் பாப்பையா விளக்கம்:

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே

கலைஞர் விளக்கம்:

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது

மணக்குடவர் விளக்கம்:

பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே. இது பசியைக் கெடுக்கு மென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை உண்டாக்கிக் கொடுப்பது, தானும் உண்பவர்களுக்கு உணவாக இருப்பதும் மழையேயாகும்.

பரிமேலழகர் விளக்கம்:

துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி, துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.).
English Translation:
The rain begets the food we eat
English Explanation:
Rain produces good food, and is itself food
English Couplet:
The rain makes pleasant food for eaters rise,As food itself, thirst-quenching draught supplies
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Blessing of Rain (Vaansirappu)

Search Incoming Terms:

குறள் 12, துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், வான்சிறப்பு திருக்குறள், துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் திருக்குறளின் விளக்கம், thuppaarkkuth thuppaaya thuppaakkith thuppaarkkuth thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, vaansirappu thirukkural, thuppaarkkuth thuppaaya thuppaakkith thuppaarkkuth thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...