Thirukkural No: 619/1330



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan
Meyvaruththak Kooli Tharum

குறள் எண்: 619
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : ஆள்வினை உடைமை
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

கலைஞர் விளக்கம்:

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்

மணக்குடவர் விளக்கம்:

புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

தெய்வத்தான் ஆகாது எனினும் - முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் - முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது. (தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.).
English Translation:
Though fate is against fulfilment Hard labour has ready payment
English Explanation:
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward
English Couplet:
Though fate-divine should make your labour vain,Effort its labours sure reward will gain
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Manly Effort (Aalvinaiyutaimai)

Search Incoming Terms:

குறள் 619, தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், ஆள்வினை உடைமை திருக்குறள், தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் திருக்குறளின் விளக்கம், theyvaththaan aakaa theninum muyarsidhan thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, aalvinaiyutaimai thirukkural, theyvaththaan aakaa theninum muyarsidhan thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...