Thirukkural No: 55/1330



தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal
Peyyenap Peyyum Mazhai

குறள் எண்: 55
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
குறளின் இயல்: இல்லறவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

கலைஞர் விளக்கம்:

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்

மணக்குடவர் விளக்கம்:

தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

வீ. முனிசாமி விளக்கம்:

தெய்வத்தினைத் தொழுதாதவளாகிக் கணவனைத் தொழுது துயில்விட்டு எழுபவள் 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும்.

பரிமேலழகர் விளக்கம்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.).
English Translation:
Her spouse before God who adores, Is like rain that at request pours
English Explanation:
If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain
English Couplet:
No God adoring, low she bends before her lord,Then rising, serves: the rain falls instant at her word
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: The Worth of a Wife (Vaazhkkaith Thunainalam)

Search Incoming Terms:

குறள் 55, தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், இல்லறவியல் திருக்குறள், வாழ்க்கைத் துணைநலம் திருக்குறள், தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் திருக்குறளின் விளக்கம், theyvam thozhaaal kozhunan thozhudhezhuvaal thirukkural explanation, araththuppaal thirukkural, illaraviyal thirukkural, vaazhkkaith thunainalam thirukkural, theyvam thozhaaal kozhunan thozhudhezhuvaal thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...