Thirukkural No: 7/1330



தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal
Manakkavalai Maatral Aridhu

குறள் எண்: 7
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

சாலமன் பாப்பையா விளக்கம்:

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்

கலைஞர் விளக்கம்:

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை

மணக்குடவர் விளக்கம்:

பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர், சேராதவ ரதனு ளழுந்துவார்.

வீ. முனிசாமி விளக்கம்:

தனக்கு ஈதாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது.

பரிமேலழகர் விளக்கம்:

தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது, மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு அருமை இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.).
English Translation:
His feet, whose likeness none can find, Alone can ease the anxious mind
English Explanation:
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable
English Couplet:
Unless His foot, to Whom none can compare, men gain,Tis hard for mind to find relief from anxious pain
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Praise of God (Katavul Vaazhththu)

Search Incoming Terms:

குறள் 7, தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், கடவுள் வாழ்த்து திருக்குறள், தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் திருக்குறளின் விளக்கம், thanakkuvamai illaadhaan thaalserndhaark kallaal thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, katavul vaazhththu thirukkural, thanakkuvamai illaadhaan thaalserndhaark kallaal thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...