Thirukkural No: 57/1330



சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

Siraikaakkum Kaappevan Seyyum Makalir
Niraikaakkum Kaappe Thalai

குறள் எண்: 57
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
குறளின் இயல்: இல்லறவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

கலைஞர் விளக்கம்:

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்

மணக்குடவர் விளக்கம்:

மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.

வீ. முனிசாமி விளக்கம்:

மகளிரைச் சிறைவைத்துக் காத்தல் என்பது என்ன பயனைச் செய்ய முடியும்? நிறையென்னும் கற்பினால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதே தலையான காப்பாகும்.

பரிமேலழகர் விளக்கம்:

மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.
English Translation:
Of what avail are watch and ward? Their purity is womens guard
English Explanation:
What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity
English Couplet:
Of what avail is watch and ward?Honours womans safest guard
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: The Worth of a Wife (Vaazhkkaith Thunainalam)

Search Incoming Terms:

குறள் 57, சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், இல்லறவியல் திருக்குறள், வாழ்க்கைத் துணைநலம் திருக்குறள், சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் திருக்குறளின் விளக்கம், siraikaakkum kaappevan seyyum makalir thirukkural explanation, araththuppaal thirukkural, illaraviyal thirukkural, vaazhkkaith thunainalam thirukkural, siraikaakkum kaappevan seyyum makalir thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...