Thirukkural No: 26/1330



செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

Seyarkariya Seyvaar Periyar Siriyar
Seyarkariya Seykalaa Thaar

குறள் எண்: 26
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார் பெருமை
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்

சாலமன் பாப்பையா விளக்கம்:

பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள், செய்ய முடியாதவரோ சிறியவரே

கலைஞர் விளக்கம்:

பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்

மணக்குடவர் விளக்கம்:

செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர். அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர். செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.

வீ. முனிசாமி விளக்கம்:

செய்தற்கு அருமையான செயல்களைச் செய்பவர்கள் பெரியோர்கள் ஆவார்கள். செய்வதற்கு அறிய செயல்களைச் செய்யமாட்டாமல் எளியவற்றைச் செய்பவர்கள் சிறியோர்களாவார்கள்.

பரிமேலழகர் விளக்கம்:

செயற்கு அரிய செய்வார் பெரியர் - ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, நாலிரு வழக்கின் தாபதபக்கம் (புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர், அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.).
English Translation:
The small the paths of ease pursue The great achieve things rare to do
English Explanation:
The great will do those things which is difficult to be done, but the mean cannot do them
English Couplet:
Things hard in the doing will great men do,Things hard in the doing the mean eschew
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Greatness of Ascetics (Neeththaar Perumai)

Search Incoming Terms:

குறள் 26, செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், நீத்தார் பெருமை திருக்குறள், செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் திருக்குறளின் விளக்கம், seyarkariya seyvaar periyar siriyar thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, neeththaar perumai thirukkural, seyarkariya seyvaar periyar siriyar thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...