Thirukkural No: 389/1330



செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

Sevikaippach Chorporukkum Panputai Vendhan
Kavikaikkeezhth Thangum Ulaku

குறள் எண்: 389
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : இறைமாட்சி
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.

கலைஞர் விளக்கம்:

காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்

மணக்குடவர் விளக்கம்:

தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே உலகு தங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.

வீ. முனிசாமி விளக்கம்:

துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.

பரிமேலழகர் விளக்கம்:

சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவுநோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது, கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம். ('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, இடிக்குந் துணையாயினார் என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை : விசேட உணர்வினராதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.).
English Translation:
Under his shelter thrives the world Who bears remarks bitter and bold
English Explanation:
The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear
English Couplet:
The king of worth, who can words bitter to his ear endure,Beneath the shadow of his power the world abides secure
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: The Greatness of a King (Iraimaatchi)

Search Incoming Terms:

குறள் 389, செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், இறைமாட்சி திருக்குறள், செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் திருக்குறளின் விளக்கம், sevikaippach chorporukkum panputai vendhan thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, iraimaatchi thirukkural, sevikaippach chorporukkum panputai vendhan thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...