
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
Saalpirkuk Kattalai Yaadhenin Tholvi
Thulaiyallaar Kannum Kolal
குறள் எண்: | 986 | |
---|---|---|
குறளின் பால்: | பொருட்பால் | |
அதிகாரம் : | சான்றாண்மை | |
குறளின் இயல்: | குடியியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.சாலமன் பாப்பையா விளக்கம்:
சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.கலைஞர் விளக்கம்:
சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்மணக்குடவர் விளக்கம்:
சால்பாகிய பொன்னினளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாதெனின், அது தம்மினுயர்ந்தார் மாட்டுக் கொள்ளுந் தோல்வியை இழிந்தார் மாட்டுங் கோடல்.வீ. முனிசாமி விளக்கம்:
பரிமேலழகர் விளக்கம்:
சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துலை அல்லார்கண்ணும் கொளல் - அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல். (துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம்.).
English Translation:
To bear repulse een from the mean Is the touch-stone of worthy men
To bear repulse een from the mean Is the touch-stone of worthy men
English Explanation:
The touch-stone of perfection is to receive a defeat even at the hands of ones inferiors
The touch-stone of perfection is to receive a defeat even at the hands of ones inferiors
English Couplet:
What is perfections test? The equal mindTo bear repulse from even meaner men resigned
What is perfections test? The equal mindTo bear repulse from even meaner men resigned
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Miscellaneous (Kudiyiyal),
Adikaram: Perfectness (Saandraanmai)
Iyal Name: Miscellaneous (Kudiyiyal),
Adikaram: Perfectness (Saandraanmai)