Thirukkural No: 59/1330



புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun
Erupol Peetu Natai

குறள் எண்: 59
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
குறளின் இயல்: இல்லறவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

சாலமன் பாப்பையா விளக்கம்:

புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

கலைஞர் விளக்கம்:

புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்

மணக்குடவர் விளக்கம்:

புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.

வீ. முனிசாமி விளக்கம்:

புகழ்வதற்குரிய மனையாளைப் பெறாத இல்வாழ்வார்களுக்குத் தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னே ஆண்சிங்கம் போன்ற பெருமிதமான நடை இல்லை.

பரிமேலழகர் விளக்கம்:

புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).
English Translation:
A cuckold has not the lion-like gait Before his detractors aright
English Explanation:
The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them
English Couplet:
Who have not spouses that in virtues praise delight,They lion-like can never walk in scorners sight
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: The Worth of a Wife (Vaazhkkaith Thunainalam)

Search Incoming Terms:

குறள் 59, புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், இல்லறவியல் திருக்குறள், வாழ்க்கைத் துணைநலம் திருக்குறள், புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் திருக்குறளின் விளக்கம், pukazhpurindha illilorkku illai ikazhvaarmun thirukkural explanation, araththuppaal thirukkural, illaraviyal thirukkural, vaazhkkaith thunainalam thirukkural, pukazhpurindha illilorkku illai ikazhvaarmun thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...