Thirukkural No: 532/1330



பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு

Pochchaappuk Kollum Pukazhai Arivinai
Nichcha Nirappuk Kon Raangu

குறள் எண்: 532
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : பொச்சாவாமை
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்

சாலமன் பாப்பையா விளக்கம்:

நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்

கலைஞர் விளக்கம்:

நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்

மணக்குடவர் விளக்கம்:

மறவியாகின்றது புகழைக்கொல்லும்

நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லுமாறு போல. இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார். Translation

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

புகழைப் பொச்சாப்புக் கொல்லும் - ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும், அறிவினை நிச்சநிரப்புக் கொன்றாங்கு - அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல. (நிச்ச நிரப்பு

நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்
English Translation:
Negligence kills renown just as Ceaseless want wisdom destroys
English Explanation:
Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge
English Couplet:
Perpetual, poverty is death to wisdom of the wise,When man forgets himself his glory dies
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Unforgetfulness (Pochchaavaamai)

Search Incoming Terms:

குறள் 532, பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், பொச்சாவாமை திருக்குறள், பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை திருக்குறளின் விளக்கம், pochchaappuk kollum pukazhai arivinai thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, pochchaavaamai thirukkural, pochchaappuk kollum pukazhai arivinai thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...