Thirukkural No: 533/1330



பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு

Pochchaappaark Killai Pukazhmai Adhuulakaththu
Eppaalnoo Lorkkum Thunivu

குறள் எண்: 533
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : பொச்சாவாமை
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்

சாலமன் பாப்பையா விளக்கம்:

மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை, இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்

கலைஞர் விளக்கம்:

மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்

மணக்குடவர் விளக்கம்:

பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம், அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு. இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது. Translation

To self-oblivious men no praise , this rule Decisive wisdom sums of every school. Explanation

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை, அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. (அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, எப்பால் நூலோர்க்கும் துணிவு என்றார்.).
English Translation:
Forgetful nature fails of fame All schools of thinkers say the same
English Explanation:
Thoughtlessness will never acquire fame, and this tenet is upheld by all treatises in the world
English Couplet:
To self-oblivious men no praise, this ruleDecisive wisdom sums of every school
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Unforgetfulness (Pochchaavaamai)

Search Incoming Terms:

குறள் 533, பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், பொச்சாவாமை திருக்குறள், பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து திருக்குறளின் விளக்கம், pochchaappaark killai pukazhmai adhuulakaththu thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, pochchaavaamai thirukkural, pochchaappaark killai pukazhmai adhuulakaththu thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...