Thirukkural No: 10/1330



பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

Piravip Perungatal Neendhuvar Neendhaar
Iraivan Atiseraa Thaar

குறள் எண்: 10
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும் மற்றவர் கடக்க முடியாது

சாலமன் பாப்பையா விளக்கம்:

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர், மற்றவர் நீந்தவும் மாட்டார்

கலைஞர் விளக்கம்:

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்

மணக்குடவர் விளக்கம்:

பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர், சேராதவ ரதனு ளழுந்துவார்.

வீ. முனிசாமி விளக்கம்:

இறைவன் அடிகள் என்னும் தொப்பத்தைச் சேர்ந்தவர்கள், பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் (நினைத்திருக்காதவர்கள்) நீந்த மாட்டார்கள், அதனுள் அழுந்துவார்கள்.

பரிமேலழகர் விளக்கம்:

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர், சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், பிறவிப் பெருங்கடல் என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.).
English Translation:
The sea of births they alone swim Who clench His feet and cleave to Him
English Explanation:
None can swim the great sea of births but those who are united to the feet of God
English Couplet:
They swim the sea of births, the Monarchs foot who gain,None others reach the shore of beings mighty main
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Praise of God (Katavul Vaazhththu)

Search Incoming Terms:

குறள் 10, பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், கடவுள் வாழ்த்து திருக்குறள், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் திருக்குறளின் விளக்கம், piravip perungatal neendhuvar neendhaar thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, katavul vaazhththu thirukkural, piravip perungatal neendhuvar neendhaar thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...