Thirukkural No: 54/1330



பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

Pennin Perundhakka Yaavula Karpennum
Thinmaiun Taakap Perin

குறள் எண்: 54
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
குறளின் இயல்: இல்லறவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

சாலமன் பாப்பையா விளக்கம்:

கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?

கலைஞர் விளக்கம்:

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?

மணக்குடவர் விளக்கம்:

பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.

வீ. முனிசாமி விளக்கம்:

கற்பு என்னும் கலங்காமையாகிய மனத்திண்மை இருந்துவிட்டால் பெண்மைவிட உயர்வான (மேம்பட்ட) பொருள்கள் யாவை உள?.

பரிமேலழகர் விளக்கம்:

பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.).
English Translation:
What greater fortune is for men Than a constant chaste woman?
English Explanation:
What is more excellent than a wife, if she possess the stability of chastity ?
English Couplet:
If woman might of chastity retain,What choicer treasure doth the world contain
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: The Worth of a Wife (Vaazhkkaith Thunainalam)

Search Incoming Terms:

குறள் 54, பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், இல்லறவியல் திருக்குறள், வாழ்க்கைத் துணைநலம் திருக்குறள், பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திருக்குறளின் விளக்கம், pennin perundhakka yaavula karpennum thirukkural explanation, araththuppaal thirukkural, illaraviyal thirukkural, vaazhkkaith thunainalam thirukkural, pennin perundhakka yaavula karpennum thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...