பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்
Panennaam Paatarku Iyaipindrel Kanennaam
Kannottam Illaadha Kan
| குறள் எண்: | 573 | |
|---|---|---|
| குறளின் பால்: | பொருட்பால் | |
| அதிகாரம் : | கண்ணோட்டம் | |
| குறளின் இயல்: | அரசியல் | |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.சாலமன் பாப்பையா விளக்கம்:
பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?கலைஞர் விளக்கம்:
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்மணக்குடவர் விளக்கம்:
பண் என்ன பயனுடைத்தாம், பாடலொடு பொருந்தாதாயின். அதுபோலக் கண் என்ன பயனுடைத்தாம், கண்ணோட்ட மில்லாத காலத்து. இது பிறர்க்கும் இன்பம் பயவாதென்றது.வீ. முனிசாமி விளக்கம்:
பரிமேலழகர் விளக்கம்:
பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் - பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்; கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் - அதுபோலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து. ('பண்', 'கண்' என்பன சாதிப்பெயர், பண்களாவன: பாலையாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: யாழின்கண் வார்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும், பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையாதவழிப் பண்ணால் பயன் இல்லாதவாறுபோலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்' (திரிகடுகம் 1) என்புழிப் போலக் கொள்க.).
English Translation:
Of tuneless song what is the use? Without gracious looks what are eyes?
Of tuneless song what is the use? Without gracious looks what are eyes?
English Explanation:
Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness
Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness
English Couplet:
Where not accordant with the song, what use of sounding chordsWhat gain of eye that no benignant light affords
Where not accordant with the song, what use of sounding chordsWhat gain of eye that no benignant light affords
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Benignity (Kannottam)
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Benignity (Kannottam)