
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
Ozhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin
Eydhuvar Eydhaap Pazhi
குறள் எண்: | 137 | |
---|---|---|
குறளின் பால்: | அறத்துப்பால் | |
அதிகாரம் : | ஒழுக்கம் உடைமை | |
குறளின் இயல்: | இல்லறவியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.சாலமன் பாப்பையா விளக்கம்:
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.கலைஞர் விளக்கம்:
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்மணக்குடவர் விளக்கம்:
ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.வீ. முனிசாமி விளக்கம்:
எல்லோரும் ஒழுக்கத்தினால் மேம்பாட்டினை அடைவார்கள். ஒழுக்கத்திலிருந்து தவறுவதனால் அடைந்து வீடாக கூடாத பழியினை அடைய பெறுவர்.பரிமேலழகர் விளக்கம்:
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.).
English Translation:
Conduct good ennobles man, Bad conduct entails disgrace mean
Conduct good ennobles man, Bad conduct entails disgrace mean
English Explanation:
From propriety of conduct men obtain greatness, from impropriety comes insufferable disgrace
From propriety of conduct men obtain greatness, from impropriety comes insufferable disgrace
English Couplet:
Tis source of dignity when true decorum is preserved,Who break decorums rules endure een censures undeserved
Tis source of dignity when true decorum is preserved,Who break decorums rules endure een censures undeserved
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: The Possession of Decorum (Ozhukkamutaimai)
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: The Possession of Decorum (Ozhukkamutaimai)