Thirukkural No: 139/1330



ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya
Vazhukkiyum Vaayaar Solal

குறள் எண்: 139
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : ஒழுக்கம் உடைமை
குறளின் இயல்: இல்லறவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

கலைஞர் விளக்கம்:

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்

மணக்குடவர் விளக்கம்:

தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்க முடையார்க்கு இயலாது.

வீ. முனிசாமி விளக்கம்:

நல்லொழுக்கமுள்ள பெரியவர்களுக்கு மறந்துங்கூடத் தீமை தாரும் சொற்களை சொல்லுவதென்பது முடியாததாகும்.

பரிமேலழகர் விளக்கம்:

வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. (தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொல் சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.).
English Translation:
Foul words will never fall from lips Of righteous men even by slips
English Explanation:
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully
English Couplet:
It cannot be that they who strict decorums law fulfil,Een in forgetful mood, should utter words of ill
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: The Possession of Decorum (Ozhukkamutaimai)

Search Incoming Terms:

குறள் 139, ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், இல்லறவியல் திருக்குறள், ஒழுக்கம் உடைமை திருக்குறள், ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய திருக்குறளின் விளக்கம், ozhukka mutaiyavarkku ollaave theeya thirukkural explanation, araththuppaal thirukkural, illaraviyal thirukkural, ozhukkamutaimai thirukkural, ozhukka mutaiyavarkku ollaave theeya thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...