Thirukkural No: 620/1330



ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith
Thaazhaadhu Ugnatru Pavar

குறள் எண்: 620
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : ஆள்வினை உடைமை
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

கலைஞர் விளக்கம்:

``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்

மணக்குடவர் விளக்கம்:

ஒரு வினையை மனத்திற் றளர்வு இன்றி நீட்டியாமல் முயலுமவர், பயன்படாமல் விலக்குகின்ற தீய வினையையும் முதுகு புறங்காண்பர். இஃது ஊழ்தன்னையும் வெல்வ ரென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

ஊழையும் உப்பக்கம் காண்பர் - பயனை விலக்குவதாய ஊழினையும் புறங்காண்பர்; உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் - அவ்விலக்கிற்கு இளையாது வினையைத் தாழ்வற முயல்வார். (தாழ்வறுதல் - சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல். ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின் , பலகால் முயல்வார் பயன் எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார்.தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
English Translation:
Tireless Toilers striving hand Shall leave even the fate behind
English Explanation:
They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back
English Couplet:
Who strive with undismayed, unfaltering mind,At length shall leave opposing fate behind
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Manly Effort (Aalvinaiyutaimai)

Search Incoming Terms:

குறள் 620, ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், ஆள்வினை உடைமை திருக்குறள், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் திருக்குறளின் விளக்கம், oozhaiyum uppakkam kaanpar ulaivindrith thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, aalvinaiyutaimai thirukkural, oozhaiyum uppakkam kaanpar ulaivindrith thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...