Thirukkural No: 215/1330



ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

Ooruni Neernirain Thatre Ulakavaam
Perari Vaalan Thiru

குறள் எண்: 215
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : ஒப்புரவறிதல்
குறளின் இயல்: இல்லறவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

கலைஞர் விளக்கம்:

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்

மணக்குடவர் விளக்கம்:

ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம். இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

உலக நடையினை அறிந்து நடக்கின்ற பேரறிஞனுடைய செல்வமானது ஊரில் வாழ்பவர்கள் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்திருப்பது போலாகும்.

பரிமேலழகர் விளக்கம்:

உலகு அவாம் பேர் அறிவாளன் திரு - உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும். (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.).
English Translation:
The wealth that wise and kind do make Is like water that fills a lake
English Explanation:
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank
English Couplet:
The wealth of men who love the fitting way, the truly wise,Is as when water fills the lake that village needs supplies
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: Duty to Society (Oppuravaridhal)

Search Incoming Terms:

குறள் 215, ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், இல்லறவியல் திருக்குறள், ஒப்புரவறிதல் திருக்குறள், ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் திருக்குறளின் விளக்கம், ooruni neernirain thatre ulakavaam thirukkural explanation, araththuppaal thirukkural, illaraviyal thirukkural, oppuravaridhal thirukkural, ooruni neernirain thatre ulakavaam thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...