Thirukkural No: 28/1330



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

Niraimozhi Maandhar Perumai Nilaththu
Maraimozhi Kaatti Vitum

குறள் எண்: 28
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார் பெருமை
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்

சாலமன் பாப்பையா விளக்கம்:

நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்

கலைஞர் விளக்கம்:

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்

மணக்குடவர் விளக்கம்:

நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.

வீ. முனிசாமி விளக்கம்:

பயன் நிறைந்த மறைமொழி எனப்படும் சொற்களைச் செல்லும் முனிவருடைய பெருமையினை அவர்கள் ஆணையாகக் சொல்லும் அச்சொற்களே (மறைமொழி) காட்டிவிடும்.

பரிமேலழகர் விளக்கம்:

நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை, நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ( நிறைமொழி என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.).
English Translation:
Full-worded men by what they say, Their greatness to the world display
English Explanation:
The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world
English Couplet:
The might of men whose word is never vain,The secret word shall to the earth proclaim
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Greatness of Ascetics (Neeththaar Perumai)

Search Incoming Terms:

குறள் 28, நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், நீத்தார் பெருமை திருக்குறள், நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து திருக்குறளின் விளக்கம், niraimozhi maandhar perumai nilaththu thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, neeththaar perumai thirukkural, niraimozhi maandhar perumai nilaththu thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...