Thirukkural No: 20/1330



நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum
Vaanindru Amaiyaadhu Ozhukku

குறள் எண்: 20
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : வான்சிறப்பு
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்

சாலமன் பாப்பையா விளக்கம்:

எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது, அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது

கலைஞர் விளக்கம்:

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்

மணக்குடவர் விளக்கம்:

நீரையின்றி யுலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது. ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.

வீ. முனிசாமி விளக்கம்:

எப்படிப்பட்ட மேலானவர்களுக்கும் நீரில்லாமல் உலகியல் நடைபெறாது. மழையில்லாமல், அந்நீர் இடைவிடாமல் ஒழுகும் ஒழுக்கும் அமையாது.

பரிமேலழகர் விளக்கம்:

யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின், ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை உலகியல் என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், நீர் இன்று அமையாது உலகம் எனின் என்றார். இதனை, நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.).
English Translation:
Water is life that comes from rain Sans rain our duties go in vain
English Explanation:
If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water
English Couplet:
When water fails, functions of nature cease, you say,Thus when rain fails, no men can walk in dutys ordered way
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Blessing of Rain (Vaansirappu)

Search Incoming Terms:

குறள் 20, நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், வான்சிறப்பு திருக்குறள், நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் திருக்குறளின் விளக்கம், neerindru amaiyaadhu ulakenin yaaryaarkkum thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, vaansirappu thirukkural, neerindru amaiyaadhu ulakenin yaaryaarkkum thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...