Thirukkural No: 219/1330



நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு

Nayanutaiyaan Nalkoorndhaa Naadhal Seyumneera
Seyyaadhu Amaikalaa Vaaru

குறள் எண்: 219
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : ஒப்புரவறிதல்
குறளின் இயல்: இல்லறவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

கலைஞர் விளக்கம்:

பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்

மணக்குடவர் விளக்கம்:

நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம். இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.).
English Translation:
The good mans poverty and grief Is want of means to give relief
English Explanation:
The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same
English Couplet:
The kindly-hearted man is poor in this alone,When power of doing deeds of goodness he finds none
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: Duty to Society (Oppuravaridhal)

Search Incoming Terms:

குறள் 219, நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், இல்லறவியல் திருக்குறள், ஒப்புரவறிதல் திருக்குறள், நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர திருக்குறளின் விளக்கம், nayanutaiyaan nalkoorndhaa naadhal seyumneera thirukkural explanation, araththuppaal thirukkural, illaraviyal thirukkural, oppuravaridhal thirukkural, nayanutaiyaan nalkoorndhaa naadhal seyumneera thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...