Thirukkural No: 908/1330



நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட் டாங்கு ஒழுகு பவர்

Nattaar Kuraimutiyaar Nandraatraar Nannudhalaal
Pettaangu Ozhuku Pavar

குறள் எண்: 908
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : பெண்வழிச் சேறல்
குறளின் இயல்: நட்பியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.

கலைஞர் விளக்கம்:

ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்

மணக்குடவர் விளக்கம்:

நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார், தம்மோடு நட்டார்.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார். ('நல்நுதலாள்' என்பதனை 'அமை ஆர் தோள்' (குறள்-906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்து ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.).
English Translation:
By fair-browed wives who are governed Help no friends nor goodness tend
English Explanation:
Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds
English Couplet:
Who to the will of her with beauteous brow their lives conform,Aid not their friends in need, nor acts of charity perform
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Friendship (Natpiyal),
Adikaram: Being led by Women (Penvazhichcheral)

Search Incoming Terms:

குறள் 908, நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், நட்பியல் திருக்குறள், பெண்வழிச் சேறல் திருக்குறள், நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் திருக்குறளின் விளக்கம், nattaar kuraimutiyaar nandraatraar nannudhalaal thirukkural explanation, porutpaal thirukkural, natpiyal thirukkural, penvazhichcheral thirukkural, nattaar kuraimutiyaar nandraatraar nannudhalaal thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...