Thirukkural No: 304/1330



நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற

Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin
Pakaiyum Ulavo Pira

குறள் எண்: 304
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : வெகுளாமை
குறளின் இயல்: துறவறவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

சாலமன் பாப்பையா விளக்கம்:

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?

கலைஞர் விளக்கம்:

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்

மணக்குடவர் விளக்கம்:

நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ? இஃது இன்பக்கேடு வருமென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியான நகைப்பினையும் மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியினையும் கொன்றுவிடுகின்ற கோபத்தைவிட வேறு பகையும் உண்டோ?.

பரிமேலழகர் விளக்கம்:

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை. (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.).
English Translation:
Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer?
English Explanation:
What other foe to man works such annoy?
English Couplet:
Wrath robs the face of smiles, the heart of joy,What other foe to man works such annoy
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Ascetic Virtue (Thuravaraviyal),
Adikaram: Restraining Anger (Vekulaamai)

Search Incoming Terms:

குறள் 304, நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், துறவறவியல் திருக்குறள், வெகுளாமை திருக்குறள், நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் திருக்குறளின் விளக்கம், nakaiyum uvakaiyum kollum sinaththin thirukkural explanation, araththuppaal thirukkural, thuravaraviyal thirukkural, vekulaamai thirukkural, nakaiyum uvakaiyum kollum sinaththin thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...