
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
Muraiseydhu Kaappaatrum Mannavan Makkatku
Iraiyendru Vaikkap Patum
குறள் எண்: | 388 | |
---|---|---|
குறளின் பால்: | பொருட்பால் | |
அதிகாரம் : | இறைமாட்சி | |
குறளின் இயல்: | அரசியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.சாலமன் பாப்பையா விளக்கம்:
நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.கலைஞர் விளக்கம்:
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்மணக்குடவர் விளக்கம்:
குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன் மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்.வீ. முனிசாமி விளக்கம்:
அரசனுக்கு ஏற்ற முறைமையைச் செய்து மக்களைத் துன்புறாமல் காப்பாற்றும் மன்னவன் பிறப்பால் மகனேயானாலும் செயலால் மக்களுக்கு இறைவன் என்று வைக்கப்படும்.பரிமேலழகர் விளக்கம்:
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன், மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பான் மகனேயாயினும், செயலான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும். (முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்' என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.).
English Translation:
He is the Lord of men who does Sound justice and saves his race
He is the Lord of men who does Sound justice and saves his race
English Explanation:
That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects)
That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects)
English Couplet:
Who guards the realm and justice strict maintains,That king as god oer subject people reigns
Who guards the realm and justice strict maintains,That king as god oer subject people reigns
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: The Greatness of a King (Iraimaatchi)
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: The Greatness of a King (Iraimaatchi)