Thirukkural No: 535/1330



முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்

Munnurak Kaavaadhu Izhukkiyaan Thanpizhai
Pinnooru Irangi Vitum

குறள் எண்: 535
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : பொச்சாவாமை
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்

சாலமன் பாப்பையா விளக்கம்:

துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்

கலைஞர் விளக்கம்:

முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்

மணக்குடவர் விளக்கம்:

தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்றகாலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்திரங்கிவிடும். Translation

To him who nought foresees, recks not of anything, The after woe shall sure repentance bring. Explanation

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும். (காக்கப்படும் துன்பங்களாவன

சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. ஊற்றின்கண் என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.).
English Translation:
Failing foresight the guardless man Shall rue his folly later on
English Explanation:
The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault
English Couplet:
To him who nought foresees, recks not of anything,The after woe shall sure repentance bring
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Unforgetfulness (Pochchaavaamai)

Search Incoming Terms:

குறள் 535, முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், பொச்சாவாமை திருக்குறள், முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை திருக்குறளின் விளக்கம், munnurak kaavaadhu izhukkiyaan thanpizhai thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, pochchaavaamai thirukkural, munnurak kaavaadhu izhukkiyaan thanpizhai thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...