Thirukkural No: 576/1330



மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்

Manno Tiyaindha Maraththanaiyar Kanno
Tiyaindhukan Notaa Thavar

குறள் எண்: 576
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : கண்ணோட்டம்
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

கலைஞர் விளக்கம்:

ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்

மணக்குடவர் விளக்கம்:

சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர். இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர் - ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; மண்ணோடு இயைந்த மரத்து அனையர் - இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர். ('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக.).
English Translation:
Like trees on inert earth they grow Who dont eye to eye kindness show
English Explanation:
They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others)
English Couplet:
Whose eyes neath brow infixed diffuse no rayOf grace, like tree in earth infixed are they
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Benignity (Kannottam)

Search Incoming Terms:

குறள் 576, மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், கண்ணோட்டம் திருக்குறள், மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ திருக்குறளின் விளக்கம், manno tiyaindha maraththanaiyar kanno thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, kannottam thirukkural, manno tiyaindha maraththanaiyar kanno thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...