மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
Mangalam Enpa Manaimaatchi Matru
Adhan Nankalam Nanmakkat Peru
குறள் எண்: | 60 | |
---|---|---|
குறளின் பால்: | அறத்துப்பால் | |
அதிகாரம் : | வாழ்க்கைத் துணைநலம் | |
குறளின் இயல்: | இல்லறவியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.சாலமன் பாப்பையா விளக்கம்:
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.கலைஞர் விளக்கம்:
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பதுமணக்குடவர் விளக்கம்:
ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.வீ. முனிசாமி விளக்கம்:
மனைவியினுடைய நற்குண நற்செயல்களை இல்லறத்திற்கு மங்கலம் என்று கூறுவர். அந்த மங்கலத்திற்கு நன்மக்கள் பெறுதலை அணிகலம் என்று கூறுவர்.பரிமேலழகர் விளக்கம்:
மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.).
English Translation:
An honest wife is homes delight And children good are jewels abright
An honest wife is homes delight And children good are jewels abright
English Explanation:
The excellence of a wife is the good of her husband, and good children are the jewels of that goodness
The excellence of a wife is the good of her husband, and good children are the jewels of that goodness
English Couplet:
The houses blessing, men pronounce the house-wife excellent,The gain of blessed children is its goodly ornament
The houses blessing, men pronounce the house-wife excellent,The gain of blessed children is its goodly ornament
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: The Worth of a Wife (Vaazhkkaith Thunainalam)
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: The Worth of a Wife (Vaazhkkaith Thunainalam)