Thirukkural No: 838/1330



மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்

Maiyal Oruvan Kaliththatraal Pedhaidhan
Kaiyondru Utaimai Perin

குறள் எண்: 838
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : பேதைமை
குறளின் இயல்: நட்பியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.

கலைஞர் விளக்கம்:

நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்

மணக்குடவர் விளக்கம்:

முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற் போலாவதொன்று, பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும். ('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.).
English Translation:
Fools possessing something on hand Like dazed and drunken stupids stand
English Explanation:
A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy
English Couplet:
When follys hand grasps wealths increase, twill beAs when a mad man raves in drunken glee
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Friendship (Natpiyal),
Adikaram: Folly (Pedhaimai)

Search Incoming Terms:

குறள் 838, மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், நட்பியல் திருக்குறள், பேதைமை திருக்குறள், மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் திருக்குறளின் விளக்கம், maiyal oruvan kaliththatraal pedhaidhan thirukkural explanation, porutpaal thirukkural, natpiyal thirukkural, pedhaimai thirukkural, maiyal oruvan kaliththatraal pedhaidhan thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...